அவிநாசி, மே 23-அவிநாசி வட்டம், சேவூர்ஊராட்சிக்குட்பட்ட பந்தம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி மகன் நடராஜ் (54). இவர்தனது வீட்டின் முன்புறம்நான்கு ஆடுகள் கட்டியிருந்த நிலையில், அதில் ஒருஆட்டை ஒருவர் திருடிசெல்ல முற்பட்டுள்ளார். இவரை கையும், களவுமாகபிடித்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரனையில் அவர்குட்டகம் ஊராட்சிக்குட்பட்டகொட்டகாட்டுபாளையம்பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (23) எனத்தெரியவந்தது. இதையடுத்து அவர்கைது செய்யப்பட்டார்.