tamilnadu

தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்தி முடிக்க வேண்டும் திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

திருப்பூர், ஜன. 1 – மடத்துக்குளம் ஒன்றியத்துக்கு  உட் பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தல் வாக்குகளை எண்ணும் பணியை நேர்மையுடன் நடத்தி முடிக்க வேண்டும் என்று மடத்துக்குளம் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக மடத்துக்குளம் தேர்தல் நடத்தும் அலுவலரான, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்ப தாக பரவலாக  பொது மக்கள், எதிர்க் கட்சிகள் மத்தியில் சந்தேகம் இருக் கிறது. எனவே வாக்கு  எண்ணிக் கையை நேர்மையாக நடத்திக் கொடுக்க உறுதி செய்ய வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற வீடியோ ஒளிப்படக் காட்சி பதிவு செய்ய வேண் டும், வாக்குகளைத் தனியாகப் பிரிக் கும்போதும், பிரித்த வாக்குகளை எண்ணும் இடங்களுக்குக் கொண்டு செல்லும்போதும் வேட்பாளர்களின் முகவர்கள் கண்டிப்பாக உடன் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும், வேட் பாளரின் முகவர்கள், வாக்குச் சீட்டில் பதிவான வாக்கினை தெளிவாகக் காணும்படி ஏற்பாடு செய்ய வேண்டும். பதிவான வாக்குகள் உரிய வேட்பாள ருக்கு சேர்வதற்கு நேர்மையான முறை யில் வாக்குகள் எண்ணப்பட வேண் டும்.முடிவுகள் உடனுக்குடன் இணை யத்தில் பதிவேற்றப்பட்டு வெளியில் ஒலி பெருக்கியிலும் அறிவிக்கப்பட வேண்டும், அதன் பிறகே அடுத்த ஊராட்சி சார்ந்த வாக்குகளை எண்ணத் தொங்க வேண்டும்.இவ் வாறு ஜெயராமகிருஷ்ணன் கடிதத் தில் கூறியிருக்கிறார்.

;