அவிநாசி, ஜூலை 13- நீர்நிலை மேலாண்மை குறித்து கருவலூர் ஹயக்ரீவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சனியன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், வீடுகளில் மழைநீர் சேகரிக்க வேண்டும். மழை வளம் பெருக்க மரம் வளர்க்க வேண்டும். நீர் மேலாண்மை குறித்தும், கௌசிகா நதியில் தூர்வாரப் பட்டு மீட்டெடுக்க வேண்டும். நிலத்தடி நீர் செறிவூட்டல் வேண்டும். கானூர் குளத்தை தூர்வார மாணவர்களை பங்கேற்க வைப்பது போன்ற பல்வேறு விஷயங்களை 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கௌசிகா செல்வராஜ், களஞ்சியம் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அத்திக்கடவு சுப்பிரமணியம், பள்ளி தாளாளர் பழனிச்சாமி, முதல்வர் ஹேமா, சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.