tamilnadu

மதுபானக் கடையை மூடாவிட்டால் போராட்டம்

திருப்பூர், ஜூலை 5- திருப்பூர் சிங்காரவேலன் நகரில் உள்ள மதுபானக் கடையை மூடாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், சிங்காரவேலன் நகரில் மது பானக் கடை மற்றும் மதுக்கூடம் ஒன்று செயல்பட்டு வரு கிறது. இக்கடையில் மதுபிரியர்கள் கூட்டம் எந்நேர மும் அலைமோதுகிறது. மேலும், நடு சாலையில் நின்று கொண்டு மது அருந்துவதும், அரை நிர்வாணமாக சாலை யில் தூங்குவதும் அப்பகுதிப் பொதுமக்கள் குறிப்பாக  பெண்களிடையே முகம் சுளிக்க வைக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் சம்பந்தபட்ட மது பானக் கடையை உடனடியாக அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் மனு அளித்துள்ள னர். இதையடுத்து அந்த கடையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதிப் பொதுமக்கள் மாவட்ட மதுபானக் கடை மேலாளரையும் சந்தித்து மனு அளித்தனர். கடை மேலா ளரோ, மதுபானக் கடையை மூட கால அவகாசம் கேட்டுள்ள தாக தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், இப்பிரச்சனை தொடர்பாக அப்பகுதிப் பொதுமக்கள் அவசர ஆலோசனை கூட்டம் ஜீவா கால னியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், மதுபானக் கடையை மூட உத்தரவிட்ட மாவட்ட நிர்வா கத்திற்கு நன்றி தெரிவித்தனர். இதை மதுபானக் கடை நிர்வாகம் அமல்படுத்தி கடையை உடனடியாக மூட வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்கள் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப் பட்டது.

;