tamilnadu

வளைய சூரிய கிரகணம் விழிப்புணர்வு நிகழ்வு

உடுமலை, டிச. 22- வருகிற (டிச.26) வியாழனன்று வானில் ஓர் அற்புத நிகழ்வாக வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. இவ் வரிய நிகழ்வானது,  தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் துவங்கி  கோவை, திருப்பூர்,உடுமலை, ஈரோடு எனப் பல்வேறு மாவட்டங்களின் ஊடாகச் செல்கிறது. இவ் வளைய கிரகணத்தைக் காண வானியலாளர் களும், மாணவர்களும் ஆவலாக  உள்ளனர். அதன் தொடர்ச்சியாக உடுமலை பகுதிகளில் பல்வேறு விழிப்பு ணர்வு நிகழ்வுகள் கலிலியோ அறிவியல் கழகம் சார் பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை நேரு தொழில்நுட்ப கல்லூரி எடிசன் மன்றமும் இணைந்து  21.12.2019 அன்று உடுமலை ஆர்.கே.ஆர். கிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு ஆர்.கே.ஆர்.கிரிக்ஸ் மேல் நிலைப்பள்ளி முதல்வர் மாலா அவர்கள் தலைமை தாங்கினார். பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் சரவணன், கோவை நேரு தொழில்நுட்ப கல்லூரி எடிசன் மன்ற உறுப்பினர் ராஜன் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சூரிய கிரகணத்தை எவ்வாறு பாதுகாப்பாக உற்றுநோக்குவது மற்றும் டிசம்பர் 26 அன்று ஊசித் துளை கேமிரா மூலம் எவ்வாறு சூரியனின் பிம்பத்தை  திரையில் விழச்செய்து வளைய சூரிய கிரகணத்தை பார்ப்பது பற்றி கலிலியோ அறிவியல் கழக ஒருங்கி ணைப்பாளர் கண்ணபிரான் செயல்முறை விளக்கத் துடன் எடுத்துக்காட்டினார். பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.கே.பி மேல்நிலைப்பள்ளி, எஸ்.வி.ஜி.மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி உட்பட 10க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு சூரியக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன. மேலும், ஆர்வமுள்ளோர் டிச.26 அன்று வானியல் நிகழ்வைக் காண கல்பனா திடலில் இதற்கான சிறப்பு  ஏற்பாடுகள் கலிலியோ அறிவியல் கழகம், அரசுகலைக் கல்லூரி இயற்பியல் துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள்  மூலம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது. 

;