tamilnadu

img

ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டத்திற்கு எதிர்ப்பு மாதர் சங்க கோரிக்கை மாநாட்டில் தீர்மானம்

தாராபுரம், செப்.5 - மத்திய அரசின் ஒரே நாடு,  ஒரே ரேசன் திட்டத்தை அமல்ப டுத்தக்கூடாது என அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க திருப் பூர் மாவட்ட கோரிக்கை மாநாட் டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திருப் பூர் மாவட்ட கோரிக்கை மாநாடு வியாழனன்று தாராபுரம் தமிழ் கலை மன்ற கூட்ட அரங்கில் நடை பெற்றது. சங்க நிர்வாகி சுலோக் சனா கொடியேற்றினார். மாவட் டத் தலைவர் ஆர்.மைதிலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்.பானுமதி, ஆர்.கவிதா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் வி.பிரமிளா, மாநில தலைவர் எஸ்.வாலண் டினா, மாவட்ட தலைவர் எஸ். பவித்ராதேவி, மாவட்ட பொருளா ளர் எ.ஷகிலா, மாவட்ட துணை தலைவர் இ.வளர்மதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினர்.  இம்மாநாட்டில் மகளிர் விடு திகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைத்து தரவேண்டும். பணியிடங்களில் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். மக ளிருக்கு தனி பேருந்து இயக்க வேண்டும். பெண்கள் பணிசெய் யும் இடங்களில் குழந்தைகள் காப்பகம் அமைத்து தரவேண்டும். ஒரேநாடு, ஒரே ரேசன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது.  சொந்த வீடற்ற ஏழை, எளியோருக்கு இலவச பட்டாவும், அடுக்குமாடி குடியிருப்பும் கட்டி தரவேண்டும். ரயில்களில் மகளிர் பெட்டியில் அதிகளவு உட்காரும் வசதியுடன் ரயில் பெட்டியை அமைக்க வேண்டும்.  சம வேலைக்கு, சம  ஊதியம் வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.  முன்னதாக, இந்த கோரிக்கை மாநாட்டில் சங்கத்தின் நிர்வாகி கள் பி.செல்வி, பி.லட்சுமி, கே. சரஸ்வதி,எஸ்.பானுமதி, எஸ். கலைவாணி, வி.தேவி, டி.காந்தி மதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.