tamilnadu

சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்ட சிறுவர், சிறுமிகள் மீட்பு

அவிநாசி, ஜூலை 30- சேவூர் அருகே தனியார் நூற்பாலையில் சட்ட விரோதமாக அழைத்து வரப்பட்டு பணியமர்த்தப் பட்ட சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டு காப்பகங் களில் ஒப்படைக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூர் பகு தியில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகி றது. இந்த நூற்பாலையில் பொதுமுடக்கத்தைப் பயன்படுத்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து உரிய அனுமதியின்றி 40க்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர், சிறுமிகள் இடைத்தரகர் மூலம் அழைத்து வரப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக திருப்பூர் குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்து ளது.  இதனையடுத்து தொழிலக பாதுகாப்பு சுகாதா ரம், குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை யினர் உள்ளிட்ட அதிகாரிகள் புதனன்று நூற்பாலை யில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 14 முதல் 8 வயதுக்கு உள்பட்ட 37 சிறுமிகள், 3 சிறுவர்கள் என 40 பேர் வேலை செய்து வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுவர், சிறுமிகள் 40 பேரும் மீட்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத் தத்ப்பட்டனர். பிறகு திருப்பூரில் உள்ள காப்பகங்க ளில் ஒப்படைக்கப்பட்டனர்.

;