சென்னை:
அமெரிக்கா, அபுதாபியில் சிக்கித் தவித்த 255 இந்தியர்கள் இரண்டு சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
76 இந்தியர்களுடன் அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து புறப்பட்ட சிறப்பு மீட்பு விமானம் சென்னை வந்தது. அதில் 36 ஆண்கள், 30 பெண்கள், எட்டு சிறுவர்கள், இரண்டு குழந்தைகள் இருந்தனர்.இவர்கள், அனைவருக்கும் சென்னை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டதையடுத்து, 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.அவர்களில் அரசின் இலவச தங்குமிடங்கள் தங்க யாரும் முன் வராததால் 76 பேரும் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல், 179 இந்தியர்களுடன் அபுதாபியிலிருந்து புறப்பட்ட சிறப்பு மீட்பு விமானமும் சென்னை வந்தது.
அதில் 101 ஆண்கள், 65 பெண்கள், எட்டு சிறுவர்கள், ஐந்து குழந்தைகள் என அனைவருக்கும் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் அரசின் இலவச தங்குமிடங்களான சவீதா மருத்துவக் கல்லூரிக்கு 77 பேரும்,101 பேர் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான சென்னை நகர ஹோட்டல்களுக்கும், ஒருவர் சிறப்பு அனுமதி பெற்று நெய்வேலிக் கும் அனுப்பப்பட்டனர்.