tamilnadu

img

உயர் மின்கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடுக பல்லடம் வட்டாட்சியரகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

திருப்பூர், ஜூன் 13 - பல்லடம் வட்டத்தில் உயர் மின்கோபுரங்கள் நடப்படும் கிரா மப் பகுதிகளின் விளைநிலங்க ளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தினர் முற்றுகையிட் டனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், சாமளாபுரம், பூமலூர், சுக்கம்பாளையம், செம்மிபாளை யம் ஆகிய வருவாய் கிராமங்க ளில் உயர் மின்னழுத்தத் திட்டங் களால் பாதிக்கப்படும் விவசாய விளைநிலங்களுக்கு சந்தை மதிப்பில் உரிய இழப்பீடு கேட்டு பல முறை மனுக் அளித்தும் மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்புகளைக் கொடுக்க வில்லை. பவர்கிரிட் நிறுவனத்தினர் முழுமையாக இழப்பீடு வழங்கும் வரை பணிகளை நிறுத்த வேண் டும்.

விவசாயிகளை மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற செயல்க ளில் ஈடுபடுவதை நிறுத்த வேண் டும். விவசாயிகளுக்குப் பயிர் இழப்பீடு, நிலத்துக்கான இழப் பீடு, நிலம் சேதப்படுத்தியதைச் சீர் செய்திடும் தொகை ஆகியவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி  பல்லடம் வட்டாட்சியர் அலுவல கத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகலறிந்த காவல் துறையினர் அங்கு வந்து விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். கோவை மாவட்டத்தில் இழப் பீடு நிர்ணயித்தது போல், இங்கும் இழப்பீடு நிர்ணயிக்க வேண்டும். அதுவரை விளைநிலங்களில் பணி செய்யக் கூடாது என்று வற்புறுத்தி னர்.

எனினும் திங்களன்று இரு நாட்களுக்கு வேலையை நிறுத்தி வைப்பதாக அரசுத் தரப்பினர் கூறி னர். அரசுத் தரப்பில் விவசாயி களை வஞ்சிக்காமல் உரிய நிவா ரணம் வழங்க வேண்டும் என்று  வலியுறுத்திய நிலையில் முற்று கைப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இப்போராட்டத்தில், தமிழ் நாடு விவசாயிகள் சங்க பல்ல டம் ஒன்றியச் செயலாளர் வை.பழ னிச்சாமி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், உயர்மின்கோபுர எதிர்ப்பு கூட்டி யக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஈசன், சிஐடியு மாவட் டத் துணைத் தலைவர் ப.கு.சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

;