அவிநாசி, மார்ச் 19- அவிநாசி அருகே கருவலூரில் மார்ச் மாதம் இறுதி யில் நடைபெற இருந்த தேர் திருவிழா ஒத்திவைக்கப் பட்டுள்ளது. அவிநாசி ஒன்றியம், கருவலூரில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வருடம்தோறும் மார்ச் மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். இத்திருவிழா விற்கு ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து தங்கி மூன்று நாள் தேர்த்திருவிழாவில் கலந்து கொள் வர். இந்த ஆண்டு தேர்த்திருவிழா மார்ச் மாத இறுதியில் நடைபெறும் என இந்து சமய அறநிலைத்துறை அறி வித்திருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொது நிகழ்ச்சிகள் நடைபெறுவதை மார்ச் இறுதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்ஒருபகுதி யாக கருவலூரில் தேர்த்திருவிழாவும் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி சந்திரமோகன் விடுத்த அறிக்கையில் தெரிவித் துள்ளார்.