tamilnadu

img

அடிப்படை வசதிகளை மேம்படுத்திடக்கோரி மனு

உடுமலை, செப்.4- பள்ளபாளையம் ஊராட்சி கொங்கலக்குறிச்சி மற்றும் சிவா நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி  கொடுக்கக்கோரி ஊராட்சி மன்ற தலைவரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், பள்ளபாளையம் ஊராட்சி கொங்க லக்குறிச்சி – சிவா நகர் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு  விடுபட்ட வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.

ஆழ்குழாய் கிணறுகளை சீரமைத்திட வேண் டும். தெரு விளக்கு அமைக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் சாலை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி வார்டு உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தனர்.