tamilnadu

ஆக்சிஜன் தடையால் நோயாளிகள் மரணம் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிடுக மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், செப்.22- திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக் சிஜன் தடையால் உயிரிழந்த நோயாளி களின் குடும்பங்களுக்கு    நிவாரணமாக தலா ரூ.25 லட்சம் வழங்கிட வேண்டுமென மார்க் சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டச் செயலாளர்  செ.முத் துக்கண்ணன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கள் அளிக்காத நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்த  போதும் திருப்பூர் மாவட்ட அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை என தரம் உயர்த்தப்பட்ட பின்னணியில் எந்தவித மான அடிப்படைக் கட்டமைப்புகளும் போதுமான அளவு இல்லாத நிலை உள்ளது.

கூடுதலான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ கட்ட மைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என பல முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட் டுள்ளன. ஒவ்வொரு முறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் சொல்லி காலம் கடத்தும் நடவடிக்கையை மட்டுமே மருத்துவமனை நிர்வாகம் செய்து வருகிறது. இறுதியாக அடிப்படை வசதிகள் மற் றும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய் திட வேண்டும்  என்று ஏற்கனவே மார்க் ர்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அனுப்பியிருந்தோம்.

இச்சூழலில் கட்டிட கட்டுமானப் பணியின் போது ஏற் பட்ட மின் மற்றும் ஆக்சிஜன் தடையின் காரணமாக செவ்வாயன்று இரண்டு நோயா ளிகள் மரணமடைந்துள்ளனர். ஊடகங் களில் மூன்று பேர் என செய்தி வருகிறது. எது உண்மை என்பதை மாவட்ட நிர்வா கம் தெளிவுபடுத்த வேண்டும். மேற்படி செய்தியை கேட்கும்போது அதிர்ச்சியும், ஆதங்கமும், தீராத கோபமும்  தான் அரசு மருத்துவமனை மீது வருகிறது. கோடிக்க ணக்கான மக்களின் வரிப்பணத்தில் இயங் கும் அரசு மருத்துவமனையில் சாதாரண  ஏழை, எளிய மக்களிள் மருத்துவத்திற்கு பயன்படவேண்டும், ஆனால் தற்போது நடைபெற்ற சம்பவங்கள் மக்களை பயத்தி லும்,பீதியிலும் ஆழ்த்துகிறது. முன்னதாக, கொரோனா தொற்று பர வல் கட்டுக்குள் வரும் வரை மருத்துவமனை யில் உள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என முன்பே சுட்டிக்காட்டியிருந்தோம்.

தற் போது ஏற்பட்டுள்ள உயிரிழப்பை கணக் கில் கொண்டு மருத்துவமனை வளாகத் தில் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுமானப்பணிகள் செய்வ தும், பழைய கட்டிடங்களை இடிப்பதை நிறுத்தி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இப்படி அக்கறையற்று, அஜாக்கிரதை யாக செயல்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். மரணமடைந்த நோயாளிகளின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.25 லட்சம் வழங்கிட வேண்டுமாறும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

;