tamilnadu

ஒட்டன்சத்திரம் - தாராபுரம் நான்குவழிச் சாலை விபத்துகளில் உயிரிழப்புகளைத் தடுக்க கோரிக்கை

திருப்பூர், ஆக. 2 – தாராபுரம் – ஒட்டன்சத்திரம் நான்கு வழிச் சாலை பணி முழுமை பெறாத நிலையில் போக்குவரத் துக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு உயிரி ழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இந்த விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று தலித் விடுதலை இயக் கம் கோரியுள்ளது. இது தொடர்பாக தலித் விடு தலை இயக்கப் பொதுச் செயலாளர் ச.கருப்பையா திருப்பூரில் உள்ள சாலை மேம்பாட்டுத் திட்ட கோட் டப் பொறியாளருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது: தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் இரண்டின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் முதல் தாராபுரம் வழியாக திருப்பூர் மாவட் டம் அவிநாசிபாளையம் வரை நான்கு வழிச் சாலை பணி நடை பெற்று வருகிறது. இதில் ஒட்டன் சத்திரம் வட்டம் கள்ளிமந்தயம் பகுதி யில் இப்பணி இன்னும் நிறைவு பெறாத நிலையிலேயே, சாலைப் பணியை மேற்கொண்டிருக்கும் ஆர்சிசிஎல் நிர்வாகம் பொது மக்கள் பயன்பாட்டுக்குத் அப்பகுதியைத் திறந்துவிட்டுள்ளது. கள்ளிமந்தயம் பகுதியில் அரசு பொது மருத்துவ மனை, அரசு மேல்நிலைப் பள்ளி, கால்நடை மருத்துவமனை ஆகிய வற்றுக்குச் செல்ல பொதுமக்கள், மாணவ, மாணவியர் இந்த நான்கு வழிச் சாலையைக் கடந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது.  இத்துடன் சுற்று வட்டார கிரா மப்புற மக்களும் தங்கள் அன்றாடத் தேவைகள், வேலை வாய்ப்புக்கு இந்த புறவழிச் சாலையைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. சாலைப் பணி நிறைவடையாமல் போக்குவரத்து அனுமதிக்கப்பட் டுள்ள நிலையில் அதிவேகமாக விரைந்து செல்லும் வாகனங்களால் விபத்துகள் தொடர்கதையாகி விட் டன.  எனினும் சாலைப் பணியை மேற் கொண்டிருக்கும் ஆர்சிசிஎல் நிர் வாகம் இந்த உயிரிழப்புகளைக் கண்டுகொள்ளாமல் போக்குவ ரத்தைத் தொடர்ந்து அனுமதித்து வருகிறது.

இனியும் கிராம மக்கள் உயிரிழப்புகளைத் தொடராமல் தடுக்க வேண்டும். அதற்காக கள்ளி மந்தயம் முதல் பொருளூர் சாலை, தேவத்தூர் முதல் கள்ளிமந்தயம் சாலை, கள்ளிமந்தயம் முதல் புங்கன் வலசு சாலை, புறவழிச் சாலை அமைந்துள்ள அரசு மருத்துவ மனை, கால்நடை மருத்துவமனை மற்றும் அரசு, தனியார் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் நான்கு வழிச் சாலைக்குக் குறுக்காக கீழ்தளப் பாலம் அமைக்க வேண்டும். இது தொடர்பாக பல முறை கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிலையில், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர், பழனி வருவாய் கோட்டாட்சியர், திருப்பூர் சாலை மேம்பாட்டுத் திட்ட தனி வட்டாட்சி யர் ஆகியோர் கோட்டப் பொறியா ளருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப் பப்பட்டுள்ளது.

எனினும் கோட்டப் பொறியாளரிடம் இருந்து, சாலைப் பணியைச் செய்யும் ஆர்சிசிஎல் நிறு வனத்துக்கு இது தொடர்பாக எவ் வித உத்தரவோ, பரிந்துரையோ  செய்யப்படவில்லை. எனவே சாலை மேம்பாட்டுத் திட்ட கோட் டப் பொறியாளர் மேற்படி நிறுவனத் துக்கு உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும். குறிப்பாக சாலையைத் திறந்து விட்டதால் நேரிட்ட விபத்துகளில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் குடும்பங் களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மேற்குறிப்பிட்ட தேவையான இடங்களில் கீழ்தளப் பாலங்கள் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ச.கருப் பையா கேட்டுக் கொண்டுள்ளார்.

;