tamilnadu

img

திருப்பூரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு

திருப்பூர், ஜூன் 6- திருப்பூரில் சமூக நலத்துறையின் சார்பில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத் தினை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில், அமைந்துள்ள அரசு மருத்துவமனை வளாகத் தில், மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில்  பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை  மையத்தினை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் திறந்து வைத்தார்.

இதன்பின் அவர் பேசுகையில், சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையமானது அக்டோபர்-2019 மாதம் முதல் பெண்களுக்கான இலவச தொலைபேசி எண் 181 (ஒன்ஸ்டாப் சென்டர்) என்ற எண்ணைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இச்சேவை மையம் மருத்துவம், பாதுகாப்பு இல்லம், சட்ட ரீதியான உதவிகள், உளவியல் ரீதியான உதவிகள் செய்து வருகின்றனர். மேலும்,  குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் 86 வழக்குகள், குழந்தை திருமண வழக்குகள் 18 மற்றும் பிற வழக்குகள் 56 என மொத்தம் 160 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவ்வழக்குகளை மாவட்ட சமூக நல அலுவலர் மூலம் விசாரிக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டன.  மேலும், திருப்பூர் மாவட்டத்தில், கடந்த மார்ச்  23-ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தடுப்பு நட வடிக்கையாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டதில் நடைபாதையில் தங்கியுள்ள முதியவர் கள் மற்றும் பெண்கள், ஆதரவற்ற நிலையில் உள்ள வர்கள் மற்றும் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல இயலாதவர்கள் என 160 நபர்கள் மீட்கப் பட்டு, இரண்டு பள்ளிகளில் 70 நாட்கள் தங்க  வைக்கப்பட்டு உணவு, உடை மற்றும் அத்தி யாவசிய தேவைகளை தொண்டு நிறுவனங் கள் மூலமாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில், அமைந்துள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள பெண்களுக்கான ஒருங் கிணைந்த சேவை மையத்தினை பொதுமக்கள் அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.  இந்நிகழ்வின்போது,  மாவட்ட சமூக நல அலு வலர் அம்பிகா, திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வள்ளி, இணை இயக்குநர் (மருத் துவப் பணிகள்) சாந்தி, மாவட்ட அரசு தலைமை  மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

;