tamilnadu

மணல் கடத்தியவர்கள் மீது இரு மாதத்திற்கு பின் வழக்குப் பதிவு

அவிநாசி, ஜூன் 13- அவிநாசி அடுத்த திம்மனையாபாளை யத்தில் ஏப்ரல்  மாதம் மணல் கொள்ளையில்  ஈடுபட்டவர்கள் மீது தற்போது வட்டாட் சியர் அவிநாசி காவல்துறையில் புகார்  அளித்து, வழக்குப் பதிவுச் செய்யப்பட் டுள்ளது அவிநாசி ஒன்றியம், தெக்கலூர் ஊராட்சியில் திம்மனையாபாளையத்தில்  ஏப்ரல் 15ஆம் தேதி தனியார் தோட்டத்தில் இரவு நேரத்தில் மணல் எடுத்துக் கொண்டி ருப்பதாக, வட்டாட்சியர் வாணி லட்சுமி ஜெகதாம்பாளுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து மணல் அள்ளிய பொக்லைன்,  ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்யப் பட்டது. இதனை வட்டாட்சியர் அலுவல கத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.  இந்நிலையில் புதனன்று அவிநாசி காவல் நிலையத்தில் வாணிலட்சுமி ஜெக தாம்பாள், தெக்கலூரை சேர்ந்த கார்த்திக் (26) என்பவர்  மணல் கொள்ளையில் ஈடு பட்டதாக புகார் அளித்தார். இதனடிப் படையில் அவிநாசி காவல் நிலையம்  வழக்குப் பதிவு செய்துள்ளது.  இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறு கையில், தொடர் மணல் கொள்ளை குறித்து  செய்தித்தாள்களில் வந்த அடிப்படையில் தான் தற்போது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. முன்னதாக தேர்தல் சமயத்தில் கனிம வளத்துறையினரால் பிடிக்கப் பட்ட ஆளும் கட்சி பிரமுகரின் டிப்பர் லாரி  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அந்த பிரமுகரின் மீது  இன்னும் வழக்குப்பதிவு செய்யப் படாமல் இருப்பதாக தெரிவித்தனர்.

;