tamilnadu

மகளிர் தங்கும் விடுதிகளை கண்காணித்திடுக அரசு நிர்வாகத்திற்கு உழைக்கும் பெண்கள் மாநாடு வலியுறுத்தல்

திருப்பூர், மே 16-தனியார் தங்கும் விடுதிகள் அரசு விதிமுறைப்படி நடத்தப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும் என உழைக்கும் பெண்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட சிஐடியு உழைக்கும் பெண்கள் மாநாடு திருப்பூரில்புதன்கிழமை நடைபெற்றது. சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு உழைக்கும் பெண்கள் அமைப்பின் மாவட்ட செயலாளர் எல்லம்மாள் தலைமை வகித்தார். ஜோதிகொடி ஏற்றி வைத்தார். பனியன்சங்கத்தின் நிர்வாகி பாரதி வரவேற்றார். உழைக்கும் பெண்கள் மாநில உதவி கன்வீனர் எம்.கிரிஜா மாநாட்டை தொடங்கி வைத்துபேசினார். மாவட்ட கன்வீனர் எம்.பாக்யம், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் டி.குமார், மாதர் சங்கமாவட்ட தலைவர் ஆர். மைதிலி, பனியன் தொழிலாளர் சங்க செயலாளர் ஜி.சம்பத் ஆகியோர் வாழ்த்தி பேசினார். இம்மாநாட்டில், பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்புசட்டத்தின் படி, புகார் குழுக்கள் அமைத்திட வேண்டும். சமவேலைக்குசம ஊதியம் வழங்கிட வேண்டும். உழைக்கும் பெண்கள் விடுதியை அரசே ஏற்று நடத்த வேண்டும்.தனியார் தங்கும் விடுதிகள் அரசு விதிமுறைப்படி நடத்தப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் நிறைவுரை ஆற்றினார். இதில் உழைக்கும் பெண்கள் பலர் பங்கேற்றனர்.

;