tamilnadu

img

கடன் கேட்டு அச்சுறுத்தும் நுண்நிதி நிறுவனங்கள் பல்லடம் வட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்டோர் புகார்

திருப்பூர், ஜூன் 17 - பல்லடம் வட்டம் பூமலூர் கிராமம் பள்ளிபாளையம் கிராமத்தில் விசைத்தறிக் கூலி வேலைக்குச் சென்று வரும் பெண்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்லடம் வட்டாட்சியரை புதனன்று சந்தித்து அளித்த மனு வில் கூறியிருப்பதாவது:

விசைத்தறித் தொழில் களில் வேலை செய் யும் இவர்கள் குடும்ப கஷ்டத்திற்காக நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்று தவணை முறையில் பணம் செலுத்தி வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு கார ணமாக விசைத்தறிகள் இயங்காததால் வருமானம் இல்லாமல் கடன் கட்ட முடிய வில்லை. ஆனால் சூலூர் கிராம சக்தி நுண் நிதி நிறுவனம், கருமத்தம்பட்டி கிராம விடி யல், பல்லடம் பிஎஸ்எஸ், ஆசிர்வாதம் உள் ளிட்ட நுண்நிதி நிறுவனத்தினர்

இவர்கள் வீட்டுக்கு வந்து உடனடியாகக் கடன் கட்ட வேண்டும் என்று மிரட்டி அச்சுறுத்தி வரு கின்றனர். வேலைகள் தொடங்கியவுடன் கடன் தொகையை முறையாகச் செலுத்து வதாக கூறினாலும் ஏற்றுக் கொள்ளாமல் அச்சுறுத்துகின்றனர். எனவே கடனை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நுண்நிதி நிறுவனங்க ளுக்கு அறிவுறுத்தும்படி அம்மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ப.கு.சத்திய மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஆர்.பரம சிவம் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்க ளுடன் வட்டாட்சியரை சந்தித்து இம்முறை யீட்டை செய்தனர்.

;