tamilnadu

இறைச்சி விற்பனை குறைவு வியாபாரிகள் கவலை

அவிநாசி, மே 26- அவிநாசி கிராமப் பகுதிகளில் உள்ள இறைச்சி விற்பனை நாளுக்கு  நாள் குறைந்து கொண்டே வருவ தால் வியாபாரிகள் கவலை தெரி வித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்தில் மொத்தம் 31  ஊராட்சி கள் செயல்படுகின்றது. இப்பகுதி களில் சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆடு, கோழிமற்றும் மீன் இறைச்சிக்  கடைகள் உள்ளது. இந்நிலையில் கொ ரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டதால் இறைச்சி விற்பனையாளர்கள் வீட்டி லேயே முடங்கிக் கிடந்தனர். இதையடுத்து மே மாதம் 4 ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்த ரவு தளர்த்தப்பட்ட நிலையில், முன்பு இருந்ததைப் போல் இறைச்சி விற்ப னை நடைபெறும் என எதிர்பார்த்த னர்.

இருப்பினும் இறைச்சி விற்பனை பெரிதும் நடைபெற வில்லை.  இதுகுறித்து இறைச்சிக்கடை உரிமையாளர் கே.எஸ்.இளங்கோ வன் கூறுகையில், தினசரி இறைச்சி  விற்பனையுடன், மாலை நேரத்தில்  மீன்சில்லி, கோழி சில்லி போன்றவை விற்பனை செய்து வந்தோம். இறைச்சி விற்பனை யைக் காட்டிலும் மாலை நேர வியா பாரம் தான் எங்களுக்கு பெரிதும்  வாழ்வாதாரத்திற்கு கை கொ டுத்தது. இந்நிலையில், கொரோனா  வைரஸ் தொற்று 144 தடை உத்த ரவு காரணமாக மாலை நேர வியாபா ரத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. இதனால் இறைச்சிக் கடையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஞாயி றன்று பெரும்பாலும் வடமாநிலத் தொழிலாளர்களின் வருகை அதிக மாக இருக்கும், தற்போது அவர்க ளின் வருகையும் குறைந்ததால் எதிர்பார்த்த வியாபாரம் நடைபெற வில்லை என வேதனை தெரிவித்தார்.

;