tamilnadu

img

புதிய வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்

அவிநாசி, ஜன. 30- அவிநாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை வியாழனன்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித்திட்டம் 2018-19, 2019-20ன் கீழ் ரூ.280.88 லட்சம், ஊரக சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.544.91 லட்சம், 14வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.173.38 லட்சம், மூலதன மானிய நிதித் திட்டத்தின் கீழ் ரூ.155.33 லட்சம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப் பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.212.95 லட்சம், மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.233.57 லட் சம் என ரூ.1601.02 லட்சம் மதிப்பீட்டில் அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 31 கிராம ஊராட்சி பகுதிகளில் பள்ளி வகுப்பறைகள், சாலை மேம்பாடு, சிறு பாலம் கட்டுவது என 145 பணிகள் நடைபெற உள்ளது.  இவற்றை வியாழனன்று தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன்சங்கர் ராஜ், அவிநாசி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜெகதீசன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்  தலைவர் பி.சிவகாமி, ஊராட்சி மன்ற தலை வர்கள் சேவூர்.ஜி.வேலுசாமி (சேவூர்), கோமதி(பழங்கரை), மரகதமணி (தெக்கலூர்), பழனிசாமி (ஆலத்தூர்), கூட்டுறவு சங்கத் தலைவர் மு.சுப்பிரமணியன், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரிகரன், சாந்திலட்சுமி, உதவி பொறியாளர் எஸ்.கோகுல், அவிநாசி வட் டாட்சியர் சாந்தி மற்றும் அரசு  அலுவலர்கள், உள் ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

;