tamilnadu

img

ஜன.8 வேலைநிறுத்தம்: திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில் வெற்றி பெறச் செய்ய முடிவு

திருப்பூர், டிச. 3 - ஜன.8 வேலைநிறுத்தத்தை திருப்பூர் பனியன் தொழிற்சாலை களில் வெற்றி பெறச் செய்ய அனைத்து தொழிற்சங்க கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் பனியன் தொழிலா ளர் சங்கங்களின் நிர்வாகிகள் கூட் டம் ஐஎன்டியுசி அலுவலகத்தில் செவ்வாயன்று ஐஎன்டியுசி தலை வர் அ.பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், பொருளா ளர் அ.ஈஸ்வரமூர்த்தி, ஏஐடியுசி செயலாளர் என்.சேகர், ஜெகநா தன், எல்பிஎப் நிர்வாகிகள் பூபதி, மயில்சாமி, ஐஎன்டியுசி செயலா ளர் சிவசாமி, ராஜேந்திரன், எச்எம் எஸ் செயலாளர் முத்துசாமி, எம் எல்எப் நிர்வாகிகள் மனோகரன், பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஜனவரி 8ஆம் தேதி 12  அம்சக் கோரிக்கைகளை வலியு றுத்தி நாடு தழுவிய வேலைநிறுத் தப் போராட்டத்தை நடத்துவ தென மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்த முடிவை திருப்பூர் பனியன் தொழிற்சாலை களில் வெற்றிகரமாக நடத்துவது பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. இதில், 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், தொழி லாளர் மற்றும் தொழிற்சாலை சட் டத்தை காரப்பரேட் முதலாளிகளுக் குச் சாதகமாகத் திருத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்யக் கூடாது, விலைவாசி உயர்வைக் கட்டுப்ப டுத்த வேண்டும், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய இஎஸ்ஐ மருத்து வமனை கட்டுமானப் பணியை உடனடியாகத் தொடங்க வேண் டும். பீஸ் ரேட், காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கும் அனைத்து சட்ட உரிமைகளையும் அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பனியன் ஏற்றுமதி மற்றும் உள் நாட்டுப் பிரிவு தொழிற்சாலைகள், பனியன் தொழில் சார்புத் தொழிற் சாலைகள் என இத்தொழிலை நம்பி வேலை செய்யும் 6 லட்சம் தொழிலாளர்களிடமும் வேலைநி றுத்தத்தின் நோக்கத்தைக் கொண்டு செல்வது, அனைத்துத் தொழிலா ளர்களையும் வேலைநிறுத்தத்தில் முழுமையாகப் பங்கேற்கச் செய் வது என்றும் இக்கூட்டத்தில் தீர் மானிக்கப்பட்டது. முன்னதாக பனியன் தொழில் சார்ந்து வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தவும் இந்த கூட்டத் தில் தீர்மானிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் பனியன் தொழில் சார்ந்து பகுதிவாரியாக போராட்டக் குழுக்கள் அமைக்கும் கூட்டத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பனியன் தொழிலில் பாடுபடும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் முழுமையாக இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் தொழிற்சங் கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
அவிநாசி
அவிநாசியில் சிஐடியு அலுவல கத்தில் திங்களன்று பொது வேலை நிறுத்த தயாரிப்புக் கூட்டம் ஐஎன் டியூசி நிர்வாகி நவநீத கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் அவிநாசி ஒன்றியத்தில் ஜனவரி 5 ல் அவிநாசி, திருமுருகன் பூண்டி, அம்மாபாளையம், ராக்கி யபாளையம், கணியம்பூண்டி, வஞ்சிபாளையம், தெக்கலூர், ஆட் டையம்பாளையம், கருவலூர், சேவூர் உள்ளிட்ட 10 மையங்களில் சிஐடியு, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, எல்பிஎப், எம்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பிரச்சாரம் மேற்கொள்வது என முடிவு செய் யப்பட்டது.  இதில் சிஐடியு சங்கத்தினர் பி.முத்துச்சாமி, ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஆர்.பழனிசாமி, ஏ.சண்முகம், கே.முருகன், பி.கனகராஜ் ஏஐடி யூசி கே.எம்.இசாக், வி.கோபால், எம்எல்எப் பாண்டியராஜன், பெருமாள் மற்றும் எல்பிஎப் மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;