tamilnadu

img

முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கும் 100 நாள்வேலை மறுக்கப்படுவதா? - விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கண்டனம்

திருப்பூர், ஜூன் 19- மடத்துக்குளத்தில் முதியோர் ஓய்வூ தியம் பெறுவோருக்கு 100 நாள்வேலை மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலூகா கடத்தூர் ஊராட்சியில் முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு 100 நாள் வேலை மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், உடனடியாக அனைவருக் கும் வேலை வழங்க வலியுறுத்தியும் மடத் துக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கம் சார்பில் வெள்ளியன்று கண்டன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்து சுமூக பேச்சுவார்த்தை நடத் தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட் டத்தை முடித்து கலைந்து சென்றனர்.

முன்னதாக, நடைபெற்ற கண்டன ஆர்ப் பட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மடத்துக்குளம் தாலுகா தலை வர் எஸ்.பழனிச்சாமி தலைமை வகித்தார். மேலும், கோரிக்கைகளை விளக்கி மாவட்ட தலைவர் சி்.சுப்பிரமணியம், மாவட்ட செய லாளர் ஆ.பஞ்சலிங்கம் ஆகியோர் பேசி னர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், சிஐடியு நிர்வாகிகள் ஆர்.வி.வடிவேல், வி.இராஜ ரத்தினம், விதொச நிர்வாகிகள் தண்ட பாணி, பாலசுப்பிரமணியம் அகியோர் உட் பட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

;