அவிநாசி, அக். 8- அவிநாசி அருகே கருவலூரில் சாக்கடை சுத்தம் இன்மை காரணமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. அவினாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சிக்குட் பட்ட மாரியம்மன் கோவில் பகுதியில் சமையல் தொழி லாளியான அய்யாசாமி (68) டெங்கு காய்ச்சல் பாதிப் புக்கு உள்ளாகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் நான்கு பேருக்கு வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. இதுகுறித்து சிவக்குமார் கூறுகையில், ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் சாக்கடையை சுத்தம் செய்யக் கோரிக்கை விடுத்தோம். டெங்கு கொசு உருவாகாமல் தடுக்கும் முறைகள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்து விட்டோம். உருவாகியுள்ள லார்வாக்களை அழிக்கவும் இதுவரை எந்த விதமான நடவடிக்கை யும் மேற்கொள்ளவில்லை. எனவே, உடனடியாக நோய்த் தொற்றும் அபாயத்திலிருந்து சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் தனர்.