tamilnadu

img

அரசு பள்ளியில் மாணவர்கள் நடத்திய மாதிரி சந்தை

அவிநாசி, செப். 21- அவிநாசி அருகே அரசு நடு நிலைப் பள்ளியில் மாணவர்கள் கணக்குப் பாடத்தை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் மாதிரி சந்தை நடத்தப்பட்டது. அவிநாசி ஒன்றியம், சேவூர் ஊராட்சி யில் சாலையப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.  இப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் படித்து வருகிறார்கள். இங்கு கணக்கு பாடத்தை எளிதாகக் கற்றுத் தரும் வகையில் பள்ளி வளா கத்தில் வெள்ளியன்று “மாதிரி சந்தை” நடை பெற்றது. கடந்த 3 வரு டங்களாக இப்பாடத் திற்காக மாதிரிச் சந்தை நடத்தப்படுகிறது. இதில் மாணவர்களே அவர்க ளின் பெற்றோர்களுடைய உதவியுடன் காய்கறிகள், மளிகைப் பொருட்களைக் கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளியிலேயே கிடைக்கும் நூல்கள், தரைவிரிப்புகள், கூடைகள் மாணவர்களின் கைவினைப் பொருட்களை பயன் படுத்தி கடைகள் வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற சந்தையை பள்ளி தலைமையாசிரியர் மல்லிகா தொடங்கி வைத்தார். காய்கறி, மளிகை, எண்ணெய், அழகு சாதனம், துணி கடைகள் என 14 கடைகள் வைக்கப்பட்டன. மாதிரி சந்தையில் கலந்து கொண்ட மாணவர்கள் விலை குறைவு, தரம் உயர்வு என மழலை மொழி பேசி விற்பனை செய்தது அனை வரையும் கவர்ந்தது.  வியாபாரிகளாக மாறி இருந்த மாணவர்களிடம் விற்பனை செய்யும் பொருட்களை வாங்க வந்த மாணவர்களுக்கு வெறும் தாளில் பண மதிப்பு எழுதப்பட்ட ரூபாய் தாள்கள் வழங்கப்பட்டது.  இது குறித்து பள்ளி மாணவ, மாணவி யர்கள் கூறுகையில், எந்த பொருள் கிலோவாக வாங்குவது, எந்த பொருள் லிட்டர், எந்த பொருள் மீட்டர் அளவில் வாங்குவது என்பதை இந்த மாதிரி சந்தை மூலம் தெரிந்து கொண்டோம். சந்தையில் எப்படி பணம் கொடுப் பது, மீதி எப்படி வாங்குவது என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது என்றனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், மாணவர்களுக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல் பாடங்களை நடத்தி எளிமையாகக் கற்று தரப் பட்டது. 3ஆம்வகுப்பு, 4ஆம் வகுப்பில் சுமார் 60 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு அளவைகள் எனும் பாடப் பகுதியில் வரும் நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை மற்றும் முகத்தல் அள வைகளைப் புரிந்து கொள்வதில் எளி மையைக் கையாண்டு வரும் உத்தி தான் “வகுப்பறைச்சந்தை “ எனும் மாதிரி சந்தை. இதன் மூலம் பணம், அளவைகள் எனும் பாடத்திற்கான திறன்களில் மாணவர்கள் தன்னிறைவு பெறுவது எளிதாகிறது என் றனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியை இடை நிலை ஆசிரியர் சத்யப்பிரியா ஏற்பாடு செய்திருந்தார்.

;