tamilnadu

திருப்பூரில் இந்து முன்னணியினர் அராஜகம்

திருப்பூர், பிப். 12–  திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகரின் காரை மர்மநபர்கள் தீ வைத்து எரித்துவிட்டனர். இச்சம்பவத்தை சாக்கிட்டு நகரின் பல பகுதிகளில் கடைகளை அடைக்கச் சொல்லி இந்து முன்ன ணியினர் மிரட்டல் விடுத்ததுடன், பேருந்துகள், பேக்கரிகள் மீது கல்வீசி சேதப்படுத்தினர். திருப்பூர் எம்.எஸ். நகர் பகுதி யில் இந்து முன்னணியின் கோட்ட செயலாளர் பி.மோகன சுந்தரம் (38) வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டி ருந்த இவரது காரை புதன்கிழமை அதிகாலை மூன்றரை மணியள வில் முகமூடி அணிந்த மர்ம நபர் கள் தீ வைத்து எரித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற வடக்கு தீய ணைப்பு நிலையத்தார் தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற் றிலுமாக எரிந்து சேதமானது. இதையடுத்து சம்பவ இடத் துக்கு வந்த காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்திய துடன், அப்பகுதியில் இருந்த சிசிடிவி மூலமும் குற்றவாளிக ளைக் கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ர மணியன் உட்பட பலர் சம்பவ இடத்தில் திரண்டனர். குற்றவாளி யைக் கைது செய்ய வலியுறுத்தி  அந்த அமைப்பினர் கொங்கு  மெயின் ரோட்டில் சாலை மறிய லில் ஈடுபட்டனர். அங்கு வந்த  திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார், துணை ஆணையர் வி.பத்ரிநாராயணன் உள்ளிட்ட  அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைந்து நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்த னர்.  இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை தனிப்படைகள் அமைக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தகவல்களை வைத்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது.

இந்து முன்னணி அடாவடி: காவல் துறை பாராமுகம்
இந்த கார் எரிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில் கொங்கு நகர் மட்டுமின்றி, வெள்ளியங் காடு, ஊத்துக்குளி ரோடு உள்பட நகரின் பல பகுதிகளில் இந்து முன்னணியைச் சேர்ந்தோர் இரு சக்கர வாகனங்களில் சென்று கடைகளை அடைக்கும்படி வற்பு றுத்தினர். திறந்திருந்த கடை களில் சென்று கடைகளை அடைக்கச் சொல்லி மிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. திருப்பூர் ஊத்துக்குளி சாலை கூலிபாளையம் சந்திப்பு, போயம் பாளையம், எம்.எஸ். நகர் அருகே ராதா நகர் பகுதியில் வந்த அரசு நகரப்பேருந்துகள் மீது இந்து முன்னணியினர் கல்வீசித் தாக்கு தல் நடத்தினர். புதிய பேருந்து நிலையம் பகுதியில் சிற்றுந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப் பட்டது. இதில் பயணிகள் சிலர் கண்ணாடிகள் குத்தி காயமடைந்த னர். மேலும் போயம்பாளையம் நஞ்சப்பா நகர் உட்பட 2 இடங்க ளில் பேக்கரிகள் மீது கல்வீசி கண் ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்து முன்னணியினர் அடா வடித்தனத்தில் ஈடுபட்டபோது சம்பவ இடங்களில் இருந்த காவல் துறையினர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக இருந்தனர். வர்த்த கர்கள், பொது மக்களுக்குப் பாது காப்புத் தருவதற்கு மாறாக, இந்து முன்னணியினரிடம் காவலர்கள் கெஞ்சிக் கொண்டிருந்த காட்சி யைக் காண முடிந்தது. தாராபுரம் சாலை, ராயபுரம், பெருமாநல்லூர் சாலை, கொங்கு  பிரதான சாலை உள்ளிட்ட பகுதி களில் கடைகள் அடைக்கப்பட் டன. இந்து முன்னணியினரின் அராஜக, அடாவடி நடவடிக்கை திருப்பூர் மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி உள் ளது.