tamilnadu

img

புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

திருப்பூர், ஜன. 1 - திருப்பூர் பின்னல் புத்தகால யத்தில் புத்தகங்களுடன் புத் தாண்டு 2020-ஐ வரவேற்பது என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த முக்கியப்  பிரமுகர்கள் பங் கேற்று சிறப்பித்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பின் னல் புத்தக நிலையம் சார்பில் செவ் வாயன்று மாலை 4 மணி முதல் 2020ஆம் ஆண்டு தொடங்கி புதன் அதிகாலை 1 மணி வரை புத்தகங் களுடன் புத்தாண்டு கொண்டாடு வோம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட் டது. இதில் புத்தாண்டை வரவேற் கும் விதமாக  புதிய புத்தகங் களை வாங்குவதும், நண்பர் கள்,உறவினர்களுக்குப் புத்தகங்க ளைப் பரிசளிக்கலாம் என்று ஏற் பாட்டாளர்கள் கூறினர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் எம்.பால சுப்பிரமணியம், இந்திய மருத்து வர் சங்க திருப்பூர் கிளைத் தலை வர் டாக்டர் செந்தில்குமரன், முன் னாள் ஒன்றியத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், தென்னிந்திய பனி யன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) பொதுச் செயலாளர் எம்ப ரர் வீ.பொன்னுசாமி, திருப்பூர் புத்தகத் திருவிழா வரவேற்புக் குழுத் தலைவரும், கிட்ஸ்கிளப்  பள்ளி தலைவருமான மோகன் கார்த்திக், வெற்றித் தமிழர் பேரவை நிர்வாகி அரிமா மு.ஜீவா னந்தம், கொங்கு வேளாளர் அறக் கட்டளைப் பொதுச் செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், திருப் பூர் பின்னல் புக் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கே.காமராஜ், ராசி சிதம்பரம், சமூக நல்லிணக்க அமைப்பின் தலைவர் பி.மோகன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் எஸ்.ரவிச்சந்திரன், எல்பிஎப் நிர்வாகி கொ.ராமதாஸ், வழக்கு ரைஞர் எம்.ஹரிஹரன், எஸ்ஏகே அருண், ஆரம்பப்  பள்ள ஆசிரி யர் கூட்டணி மாவட்டத் தலைவர் பா.ஜெயலட்சுமி, திருப்பூர் மாவட்ட செய்தியாளர் சங்கச் செய லாளர் ச.கதிர்வேல் உள்ளிட் டோர் பங்கேற்று புத்தகங்களை வாங்கியதுடன், நண்பர்களுக்கும் பரிசளித்து புத்தாண்டு வாழ்த்துக் கூறினர். இந்நிகழச்சியில் எழுத்தாளர் கள் சுப்ரபாரதிமணியன், துருவன் பாலா, மிலிட்டரி பொன்னுசாமி, கோவை சதாசிவம், து.சோ.பிரபா கரன், பொன்னுலகம் குணா, சம்சு தீன் ஹீரா, நிரஞ்சனா உள்ளிட் டோர் பங்கேற்றனர். தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.குமார், பி.ஆர்.கணேசன், அறிவியல் இயக்க மாநில நிர்வாகி வி.ராம மூர்த்தி, பின்னல் புத்தகாலயப் பொறுப்பாளர் பா.சௌந்தர பாண்டியன் உள்ளிட்டோர் நிகழ் வுக்கான ஏற்பாடுகளில் பங்கேற் றனர். இதில் பொது மக்கள், இளைஞ ர்கள், மாணவர்களும் ஆர்வத்து டன் வந்து புத்தகங்களை வாங்கி புத்தாண்டு வாழ்த்துத்தெரி வித்தனர்.

;