tamilnadu

img

விவசாயிகளை சீரழிக்கும் அவசர சட்டங்களை திரும்ப பெறுக சட்ட நகல் எரிப்பு போராட்டம் - விவசாயிகள் கைது

திருப்பூர், ஜூன் 10 – விவசாயிகள் வாழ்வை சீரழிக் கும் மத்திய அரசின் அவசர சட்டங்க ளைத் திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் புத னன்று சட்ட நகல் எரிப்புப் போராட் டத்தில் ஈடுப்பட்டு கைதாகினர்.  

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 1955 அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தம், வேளாண் விளை பொருட்கள் வணிக ஊக்கு விப்பு அவசர சட்டம், விவசாயிகளின் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசர சட்டம்,  மின்சார திருத்த சட்டம் 2020 ஆகி யவை விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என்பதால் சட்டநகல் எரிப் புப் போராட்டம் நடத்த அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல் விடுத்திருந்தது. இதன்ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் தலைமை வகித்தார்.

இதில்,  மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி சட்ட நகலை எரித்தபோது,  காவல் துறையினர் 13 பெண்கள் உட் பட 22 விவசாயிகளை கைது செய்த னர். இப்போராட்டத்தில், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க மாவட் டத் தலைவர் ஆர்.மைதிலி, மாவட்டச் செயலாளர் பவித்ராதேவி, விவசாயி கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ். வெங்கடாசலம், எஸ்.கே.கொளந்த சாமி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பேருந்து நிலை யம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமையில் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.  இதில், உடுமலை ஒன்றிய செயலா ளர் ஏ.பாலதண்டபாணி, மாவட்ட துணைத்தலைவர் உ.எஸ்.பரமசி வம், ஒன்றியத்தலைவர் எஸ்.ராஜகோ பால், துணைத்தலைவர் வி.எஸ்.பரம சிவம், எம்.பிரகாஷ், மாடலோகேஷ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட் டத் தலைவர் சி.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் எ.பஞ்சலிங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் உடு மலை ஒன்றியச் செயலாளர் கி.கனக ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சேலம்

சேலம் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க சேலம் மாவட்ட செய லாளர் எ.ராமமூர்த்தி, சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், கரும்பு விவசாயிகள் சங்க அகில இந்திய தலை வருமான டி. ரவீந்திரன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஞானசவுந்தரி, மாவட்ட துணைத்தலைவர் கே. ராஜாத்தி, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் அரிய கவுண்டர், பால் சங்க செயலாளர் மாதேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர்.

 இதேபோல், வாழப்பாடி பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் எ.பொன்னுசாமி தலை மையில் நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்தில் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாவட் டத் தலைவர் தங்கவேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளா ளர் அன்பழகன், வட்ட செயலாளர் எம். ராமசாமி,  கந்தசாமி, சீனிவாசன் உட் பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம், அரூரில் நடை பெற்ற நகல் எரிப்பு போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியசெயலாளர் மல்லிகா, விவசாயிகள் சங்க நிர்வா கிகள் இ.கே.முருகன், கே.என்.ஏழு மலை, எஸ்.கே.கோவிந்தன், ஏ.நேரு, பி.கிருஷ்ணவேணி உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.  இதேபோல், பென்னாகரத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் கே.அன்பு தலைமை வகித்தார்.

தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் சோலை அர்ஜுனன், பகுதி குழு செயலாளர் அய்யோதி, பாப்பாரப் பட்டி பகுதி செயலாளர் சிபிஎம் சின்ன சாமி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் கருவூரான், மூத்த தோழர் மோகன் உள்ளிட்ட ஏரா ளமானோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து சட்ட நகல் எடுக்கும் போது காவல்துறையினர் 10க்கும் மேற்பட் டோரை கைது செய்தனர்.

 ஈரோடு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் பேருந்துநிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் முனுசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் விஜயகுமார், மாவட்ட துணைத்தலை வர்கள் சடையப்பன், ஆனந்தராசு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பிரசன்னா முத் தாயம்மாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கெம்ப ராஜ் மாணிக்கம் உள்ளிட்டோர் பங் கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

;