உடுமலை, ஜூலை 13- உடுமலை பாரத் கேஸ் விநியோகஸ்தரான செல்வி கேஸ் ஏஜென்சி சார்பில் எரி வாயு அடுப்பு பழுது நீக்கும் முகாம் சனியன்று நடை பெற்றது. உடுமலை அமராவதி திருமண மண்டபத்தில் எரி வாயு அடுப்பு பழுது நீக்கும் முகாம் நடைபெற்றது. முகாமில், 6 மாதங்களுக்கு ஒருமுறை எரிவாயு அடுப்பை பரி சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சமையல் எரிவாயு சாதனங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என செல்வி கேஸ் ஏஜென்சி உரிமையாளர் எம்.பி.அய்யப்பன் கூறினார். இதில் செல்வி கேஸ் பணியாளர்கள் சமையல் எரிவாயு அடுப்புகளை பழுது நீக்கி வாடிக்கையாளர்களுக்கு வழங் கினர். மேலும் பாரத் பெட்ரோலியம் அறி முகப்படுத்தியுள்ள 5 கிலோ எரிவாயு உருளை குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராள மான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இம்முகாமில் கூடுதல் எரிவாயு உருளைகளுக்கு இணைப்பு கட்டணம் இல்லாமல் வழங்கப் பட்டது.