tamilnadu

அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை முழுமையாக இயக்கிடுக - சிஐடியு வலியுறுத்தல்

திருப்பூர், செப். 10– திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை முழுமையாக இயக்கி பொது மக்கள் பயன்பாட்டுக்கு ஒத்துழைக்க வேண் டும் என்று சிஐடியு திருப்பூர் மாவட் டக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட சிஐடியு நிர்வாகிகள் கூட்டத்தின் முடி வில் மாவட்டத் தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல வும், வருமானம் பெறவும் பொதுப் போக்குவரத்தையே நம்பி உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக தமி ழக அரசு கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பொது போக்குவரத்தை முடக்கி வைத் திருந்தது. தற்போது மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வு அறிவித்து தமிழகத்தில், 7ஆம் தேதி முதல் மாவட் டங்களுக்கு இடையிலும் அனைத்து அரசு பேருந்துகளும் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் அறிவிப்புக்கு மாறாக, அனைத்து வழித்தடங்களிலும் பேருந் துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். சுகாதாரத் துறையின் உத்தரவுப்படி தனி மனித இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. கிருமி நாசினியும் வழங்கப்படவில்லை. இது பயணிகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நி லையை உருவாக்கி நோய்த்தொற்றை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

எனவே, அரசு உத்தரவுப்படி மாவட்டத்திலுள்ள அனைத்து வழித் தடங்களிலும், முன்பு இயக்கப்பட்ட காலநேர அட்டவணைப்படி அனைத்து பேருந்துகளையும் முழுமை யாக இயக்கிட வேண்டும். திருப்பூரில் தற்காலிக பேருந்து நிலையங்களான கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம், யுனிவர்சல் தியேட்டர் பேருந்து நிலை யம், புதிய பேருந்து நிலையம் ஆகிய வற்றுக்கு இடையே இணைப்புப் பேருந்துகளைத் தேவைக்கேற்ப இயக்க வேண்டும். தமிழக சுகாதாரத்  துறை உத்தரவுப்படி ஒவ்வொரு பேருந் திலும் தனிமனித இடைவெளியுடன் பொது மக்கள் பயணிக்கும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்வதுடன், பய ணிகளுக்கு கிருமி நாசினியும் வழங்கப் பட வேண்டும். கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிற சூழலில் மேற்கண்ட அவசிய கோரிக்கைகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து செயல்படுத்தும்படி சிஐடியு திருப்பூர் மாவட்டக்குழுக் கேட்டுக் கொள்வ தாக அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

;