tamilnadu

திருப்பூர் மாவட்டத்தில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.510 சம்பளம் உடனே வழங்கிடுக சிஐடியு வலியுறுத்தல்

திருப்பூர், செப். 3 – திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒப் பந்த அடிப்படையில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட் சியர் நிர்ணயித்த தினக்கூலி ரூ.510-ஐ உட னடியாக வழங்கும்படி சிஐடியு வலியுறுத்தி உள்ளது. சிஐடியு திருப்பூர் மாவட்டக்குழுக் கூட் டம் மாவட்டத் தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன் தலைமையில் தியாகி பழனிச் சாமி நிலையத்தில் புதன்கிழமை நடை பெற்றது.

இதில் மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன்,  மாவட்டச் செயலாளர் கே.ரங் கராஜ் உள்பட மாவட்ட நிர்வாகிகள், மாவட் டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில், திருப்பூர் மாநக ராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சி களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற் றும் தினக்கூலி தூய்மைப் பணியாளர் களுக்கு தற்போது சராசரியாக ரூ.300 என்ற  அளவில் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர் களிடம் பிடித்தம் செய்யும் இஎஸ்ஐ., இபிஎப் உள்ளிட்டவற்றுக்கு உரிய ஆவணங்கள், ரசீ துகள் வழங்கப்படுவதில்லை.

கொரோனா காலத்திலும் முன்களப் பணியாளர்களாக துணிச்சலுடன் வேலை செய்யும் இத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியை ரூ.510 வீதம் நிர்ணயித்து கடந்த ஏப்ரல் 1ஆம்  தேதி முதல் அமல்படுத்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆணைப் பிறப்பித்துள்ளார்.

எனினும் இவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் சட்டப்படி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த ரூ.510 தினக் கூலியை இத்தூய்மைப் பணியாளர் களுக்கு உடனடியாக அமல்படுத்த வேண் டும். மேலும் கடந்த ஏப்ரல் முதல் இதுவரை யிலான சம்பள உயர்வு நிலுவைத் தொகை யையும் கணக்கிட்டு தீபாவளிப் பண்டி கைக்கு முன்னதாக இந்த தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டும் என சிஐடியு மாவட்டக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா பொது முடக்கக் காலத்தில் பல்வேறு பகுதி உழைக்கும் மக்களும் கடு மையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக விளிம்பு நிலையில் வாழக்கூடிய சாலையோர வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து சொல்ல முடியாத துயரத்தைச் சந்தித்து வருகின் றனர்.

அவர்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படும் என மத்திய  அரசு அறிவித்தது, எனினும் நடைமுறை யில் அவர்களுக்கு உரிய கடன் வசதி கிடைக் காமல் தவிக்கின்றனர். எனவே அனைத்துக்  கூட்டுறவு வங்கிகளிலும் சாலையோர வியா பாரிகளுக்குக் கடனுதவி செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும் என்றும் சிஐடியு கேட்டுக் கொண் டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தில் பல்லா யிரக்கணக்கான மக்கள், குறிப்பாக பெண் கள் வேலை, வருமானம் இழந்து சிரமப்படும் நிலையில், நுண்நிதி நிறுவனங்கள் அவர் களிடம் அடாவடித்தனமாக வசூல் நடவடிக் கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல  பகுதிகளிலும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கும் நிலையிலும், ரிசர்வ் வங்கி பொது அறி விப்பு செய்திருக்கும்போதும் இந்த நிலை தொடர்கிறது.

குறிப்பாக செப்டம்பர் 1 ஆம்  தேதி முதல் பொது முடக்கத்தில் கூடுதல் தளர் வுகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், நுண்நிதி நிறுவனத்தார் மறுபடியும் வீடு தேடிச் சென்று குழுப் பெண்களிடம் கடன் மற்றும் வட்டி வசூல் நடவடிக்கையை தீவி ரப்படுத்தி உள்ளனர். இந்த விசயத்தில்  அரசு தலையிட்டு நுண்நிதி நிறுவனங் களின் அடாவடித்தனமான வசூல் நடவ டிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் கடன் தொகையைச் செலுத்த கால நீடிப்பு வழங்குவதுடன், இதுவரை உள்ள  வட்டியைத் தள்ளுபடி செய்யவும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படுவதாக தமி ழக அரசு அறிவித்தாலும் மிகச் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே திருப்பூர்  மாவட்டத்தைப் பொருத்தவரை மக்கள்  பயன்பாட்டுக்கு பேருந்துகளை முழுமை யாக இயக்க வேண்டும்.

தற்போது திருப்பூர்  மாநகரில் ஸ்மார்ட் சிட்டி வேலை நடை பெறும் நிலையில் தற்காலிக பேருந்து நிறுத் தங்கள் செயல்படும் என அறிவிக்கப் பட்டுள்ளன. அந்த பேருந்து நிலையங் களில் பயணிகள் மற்றும் பேருந்துப் பணி யாளர்களுக்கு உரிய குடிநீர், கழிப்பறை மற்றும் நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.

அத் துடன் அனைத்துப் பேருந்து நிலையங் களுக்கும் இணைப்புப் பேருந்துகளை இயக்கி பயணிகளின் சிரமத்தைப் போக்க வும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிஐடியு திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.