tamilnadu

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அலைக்கழிப்பு

திருப்பூர், பிப். 27- கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யாமல் விவசாயிகள் அலைக்கழிப்படுவதாக வும், இடைதரகர்களுக்கு உடனடியாக கொள்முதல் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதை யொட்டி, மடத்துகுளம், குமரலிங்கம், கணியூர் உள் ளிட்ட பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் மையங் கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு நெல்லுக்கு கிலோ ரூ.19.15 வழங்கப்படுகிறது. ஆனால், விவசாயிகள் நெல்லை கொண்டு சென்றால் அதிகாரிகள் உடனடி யாக வாங்குவதில்லை. ஈரப்பதமாக இருப்பதாகக் கூறியும், உலர வைக்க வேண்டும் என காலதாமதமும் செய்கின்றனர். பணமும், உடனடியாக தருவ தில்லை. இதனால், விவசாயிகள் மீண்டும் மீண்டும் செல்ல வேண்டிய நிலை உருவாகி வருகிறது. மேலும், வெகு தொலைவில் இருந்து வாகனங் களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, நெல் கொண்டு வரும் விவசாயிகளும் இந்த அலைக்கழிப்பி னால் பாதிக்கப்படுவதால் கூடுதல் செலவும் ஏற்படு கிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறி யதாவது, ஏதாவது ஒரு காரணஙம கூறி நெல் கொள்மு தல் செய்வதை அதிகாரிகள் தட்டிக்கழிக்கின்றனர். ஆனால், இடைதரகர்கள் கொண்டு வந்தால் உடன டியாக கொள்முதல் செய்து, அப்போதே பணமும் பட்டுவாடா செய்கின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இதில், தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

;