tamilnadu

img

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கிராமங்கள் விடுபடாமல் நிறைவேற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 29 - அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் அனைத்து கிரா மங்களையும் விடுபடாமல் இணைத்து தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றிய சிறப்புப் பேரவை வலியு றுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வடக்கு ஒன்றிய சிறப்புப் பேரவைக் கூட் டம் ஞாயிறன்று பெருமாநல்லூரில், பொங் குபாளையம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் எஸ்.அப்புசாமி தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் சங்கத் தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஊத்துக்குளி ஆர்.குமார் சிறப்புரையாற்றி னார். மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.வெங்கடாசலம், சிபிஎம் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மேலும், இக்கூட்டத்தில், அவிநாசி அத் திக்கடவு திட்டப் பணிகள் தற்போது நடை பெற்று வருகிறது.

இதற்கு தமிழக அரசை பாராட்டுவதுடன், திட்டத்தில் குறிப்பிட் டுள்ளபடி குறித்த காலத்தில், கிராமங்கள் விடுபடாமல் அனைத்து குளம் குட்டை களை இணைத்து நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள நகர்ப் புற கூட்டுறவு வங்கிகளையும் மத்திய கூட்டுறவு வங்கிகளையும், ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் சட் டத்தைக் கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றியக் குழுவிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றியத் தலைவர் - கே.ரங்கசாமி, ஒன்றி யச் செயலாளர் - எஸ்.அப்புசாமி, பொருளா ளர் - ஆறுமுகம், துணைத் தலைவர் ஆறுமு கம், துணைச் செயலாளர் கோவிந்தசாமி உள்பட 15 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. நிறைவாக பி.கே.கருப்புசாமி நன்றி தெரிவித்தார்.

;