திருப்பூர், மார்ச் 9 – காங்கேயம் வட்டாரத்தில் புதிதாக தென்னை நார்த் தொழிற்சாலை தொடங்கியிருப் பதால் பொது மக்களின் குடி நீர் ஆதாரம், சுற்றுச்சூழல், கால் நடைகளுக்குப் பாதிப்பு ஏற்படு வதாகவும், எனவே அதை மூட வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர கத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் வாராந்திர குறை தீர்க் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காங்கயம் கீர னூர், பரஞ்சேர்வழி, நால்ரோடு மற்றும் மறவபாளையம் ஊராட்சி பகுதி மக்கள் அளித்த மனுவில், இந்த கிராமங்களில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் விவசாயத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் பகுதிக்கு ஒரத்துப்பாளையம் நீர்த் தேக்கத்தின் சாயக்கழிவினால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கீரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி யில், மண்ணில் உவர்ப்புத் தன்மையை அதிகமாக்கி குடி நீரின் தன்மையைக் கெடுக்கும் தொழிலான தென்னை மட்டை யில் இருந்து நார் பிரித்து எடுக் கும் தொழிற்சாலையை தொடங்கி உள்ளனர். தென்னை மட்டையில் இருந்து நார் பிரித்தெடுப்பதற்கு தென்னை மட்டையை நீரில் ஊற வைத்து, அந்த கழிவுநீரை மண்ணில் செலுத்துவதால் நிலத்தடிநீர் பாதிக்கும். புதிதாக தொடங்கும் இத்தொழிற்சாலை யால் மக்களுக்கும், சுற்றுச்சூழல் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு உண்டாகும். தென்னை மட்டை கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்யும் இத்தொழிற்சாலையால், மக்களின் வாழ்வதாரம் விவ சாயம் மற்றும் கால்நடைகள் அழிவைச் சந்திக்கும். இது தொடர்பாக இரண்டு முறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நார் தொழிற்சாலையால் 20 கி.மீ. அளவு நீர் பாதிப்படைந்து வருகிறது. ஆகவே நார் தொழிற் சாலையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
கருணை கொலை
அன்னூர், நாகம்புதூர், குன்ன தூரம்பாளையத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவர் கொடுத்த மனுவில், நான் திருப்பூர் லட்சுமி நகரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தேன். மின்சார பற்றாக்குறை மற்றும் சில காரணங்களால் நிறு வனத்தைத் தொடர்ந்து நடத்த இயலாத நிலையில் மிகவும் நஷ்டம் ஏற்பட்டது. ரூ.10 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. இது தொடர்பாக மன உளைச்சலுக்கு ஆளாகி, விபத்துக்குள்ளானேன். இதனால் ஒரு வருடம் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடன் காரர்களுக்கும் பணத்தை திருப் பிச் செலுத்த முடியவில்லை. என் சகோதரன், அப்பா இறந்துவிட்டனர். இந்த இழப்பு என்னையும், எனது அம்மாவை யும் வெகுவாக பாதித்து விட்டது. எனது தந்தை இறப்பிற்கு கூட சடங்கு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த பிரச் சனை சரியாகும் என இவ்வளவு நாட்கள் எதிர்பார்த்து இருந் தேன். ஆனால் சரியாகவில்லை. எனவே என்னை கருணைக் கொலை செய்ய வேண்டும். அல்லது எனது எதிர்கால வாழ் விற்குப் பயன்படும் வகையில் முதல்-அமைச்சர் நிவாரண நிதி யில் இருந்து ஏதேனும் உதவிடும் வகையில் பரிந்துரை செய்து உதவிட வேண்டும் என்று கேட் டுக் கொண்டார். அதிமுக நகர கழக விவசாய பிரிவு தலைவர் கிருஷ்ணசாமி கொடுத்த மனுவில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆட்சியர் அலுவலகக் கட்டிடத் திற்கு எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்ட வேண்டும். வருகிற 15ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச் சர் ஆகியோரால் பெயர் சூட்ட மாவட்ட நிர்வாகத்தின் வாயி லாக ஆவண செய்யுமாறு கேட் டுக்கொண்டார். தேசிய உழைப்பாளி மக்கள் கட்சியினர் கொடுத்த மனுவில், திருப்பூரில் இருந்து விஜயமங்க லம் வரை செல்லும் 8 பி பேருந்து செல்லும் வழிப்பாதையில் மல் லாங்காட்டுப்புதூர் பஸ் நிறுத்தம் பகுதியில் ஓர் பள்ளம் உள்ளது. மழைக் காலங்களில் இதில் வெள்ளம் சூழ்வதால் பேருந்து மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இங்கு பாலம் அமைக்க வேண்டும். மல்லங்காட்டுப்புதூரில் பயணி கள் நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுபோல், ஊத்துக்குளி டவு னில் இருந்து மருத்துவமனை செல்லும் வழியில் சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தர வேண் டும் என்றும் கேட்டுக் கொண்டுள் ளனர்.