tamilnadu

அரசுப் பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழா

திருப்பூர், ஜூலை 15- திருப்பூர் அருகே அரண்மனை புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. திருப்பூர் அரண்மனை புதூர் மாநக ராட்சி நடுநிலைப்பள்ளியில்பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் “ கல்வி சீர் விழா” வழங் கும் நிகழ்வானது நடைபெற்றது. இதில் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவி கள், அவர்களின் பெற்றோர் பள்ளிக்கு தேவையான நாற்காலிகள், புத்தகங்கள்,  தொலைக்காட்சிப் பெட்டி, மின்விசிறி,  உள்ளிட்ட பொருட்களை பள்ளிக்கு சீராக வழங்கினர். இதில் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.