tamilnadu

திருப்பூர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் குறைபாடு: சுகாதாரத்துறை செயலாளருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்

திருப்பூர், ஜூலை 4 - திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்ப டுத்தி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் மெத்தனமான நிலை, குறைபாடு இருப்பதாக வும், அதைக் களைந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முழுமை யாக ஒருங்கிணைத்து மேற் கொள்ள தலையிடும்படி மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ண னுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் கடி தம் எழுதியுள்ளார்.

இக்கடிதத்தில் மேலும் கூறியி ருப்பதாவது: திருப்பூர் மருத்துவத்  துறை அசாதாரண செயல்பாட்டில் உள்ளது. உண்மையில் கோவிட் 19 பாதிப்பு கண்டறிந்து உறுதி செய்யப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஆனால் அவிநா சியில் ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டு மதியம் 2 மணிக்கு முடிவு தெரிந்தும் இரவு 9 மணி வரை ஆம்புலன்ஸ் வரும் என்று ஒவ் வொரு மணி நேர காத்திருப்பும் பாதிக்கப்பட்டவரது குடும்பத்தின ரையும், அக்கம் பக்கம் உள்ளவர்க ளையும் பதற்றத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கியது.

திருப்பூரில் இதுபோன்று பாதிக் கப்பட்ட நபருக்கும் தாமதம் ஏற் பட்டது. மாநகராட்சி ஆணைய ரின் கவனத்திற்கு இரவு 8 மணிக்கு கொண்டு சென்றதன் விளைவாக இரவு 9.30 மணிக்கு கோவை, திருப்பூர் என அலைக்கழித்து சென்றனர். தற்போது அவிநாசி யில் பாதிக்கக்பட்டவரே நீண்ட காத்திருப்புக்கு பின் இரண்டு சக்கர வாகனத்தில் 18 கி.மீ தூரம் உள்ள அரசு  மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் நிலை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இந்த அவலம் மாவட்ட நிர்வா கத்தின் ஒருங்கிணைந்த செயல் பாட்டில் உள்ள குறைபாடுக ளையே காட்டுகிறது. மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தி னருக்கு அறிகுறிகள் இருந்தும் 3, 4 நாட்கள் பரிசோதனை செய்யா மல் அலைக்கழித்து கடும் போராட் டத்திற்கு பின் பரிசோதனை செய் தனர். தமிழகத்தில் மக்கள் தொகை அடர்த்தியாகவும், தொழில் நகரா கவும், ஏராளமான தொழிலாளர் கள் வந்து செல்லும் மையமாகவும் திருப்பூர் உள்ளது.

மாவட்ட தலை நகரமான இங்குள்ள சுகாதாரத் துறை மற்றும் திருப்பூர் மருத்துவக் கல்லூரிக்கு 1897, 2005  ஆண்டு கள் பேரிடர் மேலாண்மை சட்ட அடிப்படையில் கூடுதலான மருத் துவர்கள், செவிலியர்கள், மருத்து வப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும் வாய்ப்புள்ள  தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை அரசே ஏற்க வேண்டும், அல்லது அரசே குறைந்தபட்ச கட்டணத்தை தீர் மானித்து தனியார் மருத்துவம னைகளுக்கு வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் காப்பீடு உள்ளவர்களிடம் வேறு தொகை எதுவும் பெறாமல் சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மேலும் தற்போது தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில் ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ள நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வகைகளை உள் ளாட்சி நிர்வாகங்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

;