tamilnadu

img

அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

திருப்பூர், பிப். 19 – சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய மக்களைப் பிளவுபடுத்தும் மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் மங்கலம், வடுகன் காளிபாளையம், அறிவொளிநகர்  உள்பட சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள், அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து புதனன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இப்போராட்டத்திற்கு அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் மஜீத் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் முகமது யாசர் வரவேற்றார். மௌலவி ஸல்மான் பாரிஸ் முஃப்தி, மௌலவி இஸ்மாயில் தாவூதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மத்திய அரசு நிறைவேற்றி இருக்கும் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவை இஸ்லாமியர்களுக்கு எதிரானவை அல்ல, அது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும், ஜனநாய கத்துக்கும் எதிரானது. மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்து மக்க ளைப் பிளவுபடுத்தக் கூடியது, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் இஸ்லாமியர்களும், மற்ற மத சகோத ரர்களும் இணைந்து வெள்ளையர் களை வெளியேற்றப் போராடினோம். ஆனால் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாதவர்கள் ஆட்சியில் இருக்கி றார்கள். இவர்களுக்கு எதிராக இரண் டாவது சுதந்திரப் போராட்டமாக இது நடந்து கொண்டிருக்கிறது. நாட்டின் விடுதலையையும், அரசியல் சட்டத்தையும் பாதுகாப்போம் என்று கூறினர். இதில் பங்கேற்ற பல்லாயிரக்க ணக்கான ஆண்களும், பெண்களும் தேசியக் கொடிகளைக் கையில் ஏந்தி மத்திய அரசின் நாசகர முடிவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மிக நீளமான தேசிய கொடியையும் அந்த கூட்டத்தில் இருந்தோர் விரித்துப் பிடித்திருந்தனர். அம்பேத்கர் உரு வாக்கிய அரசியல் சட்டத்தைப் பாது காப்போம், அம்பேத்கர் வாழ்க, பெரி யார் வாழ்க, நாட்டு ஒற்றுமை, மத நல்லிணக்கம் பாதுகாப்போம், மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் என்று முழக்கங்கள் எழுப்பினர். கேரளம், மேற்கு வங்கம், ஆந்திரம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழகத்திலும் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மக்கள் தொகை கணக் கெடுப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பின்பற்றப்பட்ட அதே நடைமுறை யையே இப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என ஆட்சியருக்கு அளித்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அமைந்திருக்கும் பல்லடம் சாலை பகுதி முழுவதும் காவல் துறை யினர் தடுப்பரண்கள் அமைத்தி ருந்தனர். ஆட்சியரகம் பகுதியில் இருந்து பூம்புகார், தென்னம்பாளை யம் பகுதி வரை சுமார் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு மனித தலைகளாக காட்சியளித்தது. டி.கே.டி. பேருந்து நிறுத்தத்தில் இருந்து பல்லடம் சாலை தமிழ்நாடு திரையரங்கம், லட்சுமி திருமண மண்டபம் பகுதி வரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார், டிஐஜி பவானீஸ்வரி, முன்னாள் திருப்பூர் எஸ்.பி. கயல் விழி மற்றும் திருப்பூர் மாநகர துணை ஆணையர்கள் பத்ரிநாராயணன், பிரபாகரன் ஆகிய ஐபிஎஸ் அதி காரிகள் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடு களைக் கவனித்தனர். அனைத்து இஸ்லாமிய ஜமாத் அமைப்பின் தொண்டர்களும் பாதுகாப்பு அரண் அமைத்து ஒழுங்குபடுத்தினர். இப்போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. ஆட்சிய ரகம் அருகில் எல்ஆர்ஜி அரசினர் மகளிர் கல்லூரி செயல்பட்ட நிலை யில், தென்னம்பாளையத்தில் இருந்து மாணவிகள் இந்த போராட் டம் நடைபெற்ற பகுதியைக் கடந்து, எவ்வித தொந்தரவும் இன்றி நடந்துசென்று கல்லூரியை அடைந்தனர். மாவட்ட ஆட்சியரகத்தின் பிரதான நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டு, தடுப்பரண்கள் அமைக் கப்பட்டு இருந்ததால், அரசுத்துறை வாகனங்கள் இயல்பாக வந்து செல்ல முடியாத நிலை இருந்தது. போலீசார் வாகனங்களை பரிசோதித்த பின் னரே அனுமதித்தனர். சுமார் நான்கு மணி நேரம் ஆட்சியரக வளாகம் முற் றுகையிடப்பட்ட நிலையில் இருந் தது. மதியம் 1.30 மணிக்கு காவல் துறையினர் அனுமதி அளித்த நேரத் தில் போராட்டம் முடித்துக் கொள்ளப் பட்டு அனைவரும் கலைந்து சென்ற னர். நிறைவாக தஸ்தகீர் நன்றி கூறினார்.

;