அவிநாசி, ஜூலை 26– அவிநாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது. அவிநாசி அருகே மங்கலம் சாலையில் உள்ள தனி யார் தோட்டத்து கிணற்றில், புள்ளிமான் ஒன்று தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த தீயணைப்பு, வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி மானை மீட்ட போதும் மான் பரிதாப மாக உயிரிழந்தது. இதையடுத்து மான் அவிநாசி கால்நடை மருத்துவமனையில் பிரேதப் பரிசோ தனை செய்யப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டது.