திருப்பூர், மே 12- பொங்கலூர் ஐயப்பாநகர் பகுதியில் கொரோனா தொற் றால் விதிக்கப்பட்ட தடை 25 நாட்களுக்கு பிறகும் நீடிப்ப தால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்ப டுவதைக் களைய முழுக் கட்டுப்பாட்டைத் தளர்த்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் சிவசாமி மாவட்ட ஆட்சியருக்கு செவ்வாயன்று எழுதியுள்ள கோரிக்கை மனுவில் கூறியி ருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஐயப்பா நகர் பகுதியில் சுமார் 600 குடும்பங்களில் 2000 பேர் வசித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் விவசாயக் கூலி மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் ஆவர். இந்த பகுதி யில் கடந்த ஏப்ரல் 17 அன்று ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது. அன்று முதல் இப்பகுதி முழுவதும் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறி விக்கப்பட்டு மக்களின் அத்தியாவசிய தேவைக்கான பணி கள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடக்கப்பட்டது. தடைசெய்யப்பட்டு 24 நாட்களுக்கு பிறகு இன்று வரை யிலும் ஐய்யப்பா நகர் பகுதியில் ஒருவருக்கு கூட நோய் தொற்று கண்டறியும் சோதனை நடத்தப்படவில்லை.
சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த பகுதி யில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை எனவும், அதனால் சோதனை அவசியமில்லை எனவும் தெரிவித் தார். தற்போது நோய்தொற்று பாதித்தவரும் கோவையில் சிகிச்சை பெற்று குணமாகி கடந்த 28ஆம் தேதி அன்று வீட்டுக்கு வந்துவிட்டார். இருந்தபோதும், இப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாகவே நீடித்து வருகிறது. கடந்த மே 4 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு விவசா யம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கலாம் என அரசு அறித்துள்ள போதிலும், இப்பகுதி மக்கள் வெளியில் எங்கும் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இப்பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்ட றியப்பட்டவுடன் மேலும் எவ்வித சோதனையும், ஆய்வுக ளும் மேற்கொள்ளாமல் 2000 க்கும் மேற்பட்ட மக்களைப் பாதுகாக்கிறோம் என்று அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது நாடு முழுவதும் தளர்வு அளிக்கப்பட்ட நிலை யில் இப்பகுதி மக்கள் பெரும் மன உளைச்சலுடன் சிரமப் பட்டு வருகின்றனர். எனவே, கால தாமதம் செய்யாமல் உடனே பொங்கலூர் ஐய்யப்பா நகர் பகுதியில் உள்ள தடையை நீக்க வேண்டும் என அம்மனுவில் கேட்டுக் கொண் டுள்ளார்.