tamilnadu

ரூ.65.75லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அவிநாசி, ஜன. 9- அவிநாசியில் ரூ.65.75 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. அவிநாசி வேளான்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதி வாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இந்த வாரம் நடந்த பருத்தி ஏலத்திற்கு 4,141 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.4,500 முதல் ரூ.5,160 வரையிலும், டி.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6,100 வரையிலும் மட்ட ரகம் குவிண்டால் ரூ.1,500 முதல் ரூ.2,500 வரையிலும் வியா பாரிகள் ஏலத்தில் எடுத்த னர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.65.75 லட்சம் ஆகும்.