tamilnadu

அவிநாசியில் கிளைச் சிறை கைதிக்கு கொரோனா

அவிநாசி, ஆக. 21- அவிநாசியில் உள்ள கிளைச் சிறைச்சாலை கைதி ஒருவ ருக்கு வியாழனன்று கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவிநாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அவி நாசி கிளைச் சிறைச்சாலை, அவிநாசி சார் கருவூலம், குற்ற வியல் நடுவர் நீதி மன்றம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகி றது. இந்நிலையில், கிளைச் சிறைச்சாலையில் தண்ட னைக் கைதியாக இருந்த கோவை வெள்ளலூர் பகுதி யைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று வியாழனன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, கோவை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் கிளைச் சிறைச்சாலையில் உள்ள கைதிகள், காவலர்கள் உள்ளிட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், அவிநாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அச்சத்திற்குள்ளாகி உள்ள னர்.