tamilnadu

img

மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் மீது காவல் நிலையத்தில் புகார்

அவிநாசி, ஜூன் 10- அவிநாசி அருகே  ராக்கியாபாளையம் பகுதி  பெண்கள்  மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் மீது   திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள னர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இத னால், பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாத  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனைத்தொ டர்ந்து தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய உதவிக்  குழுக்கள்  கடன் வசூலிப்பதை  நிறுத்திவைக்க வேண்டும்  என ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் தமிழ கம் முழுவதும் சுய உதவிக்குழு பெண்களிடம்  கடன்  வசூலிப்பதை செய்து வருகிறது.

இந்நிலையில்,  திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி பேரூராட்சிக் குட்பட்ட ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த  நூற்றுக் கும் மேற்பட்ட பெண்களிடம்  மைக்ரோ பைனான்ஸ் நிறு வனங்கள் கடன் தொகையை உடனடியாக செலுத்த  வேண்டும் என தினசரி தொடர்ந்து தொலைபேசி வாயிலாகவும்,நேரிலும் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால், அந்நிறுவனத்தில் கடன் பெற்ற  பெண்கள் கடனை திருப்பித்தர கால அவகாசத்தை நீட்டிக்க  வேண்டும் எனக் கோரி சிபிஐ திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.செல்வராஜ், திருமுரு கன்பூண்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமசாமி  உட்பட ஏராளமானோர் திருமுருகன் பூண்டி காவல்  நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

;