அங்கன்வாடி பணியாளருக்கு செல்போனில் தொல்லை கொடுத்தவர் கைது
அவிநாசி, டிச. 22- அவிநாசி அருகே அங்கன்வாடியில் பணி யாற்றும் பெண்ணுக்கு செல்போனில் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர். அவிநாசி அருகே குப்பாண்டம்பாளையத்தில் அங்கன்வாடி பணியாளராக ஒரு பெண் பணியாற்றி வருகிறார். இவருடன் சைக்கிளில் ஐஸ் விற்பனை செய்யும் அவிநாசி ராயம்பாளையத்தைச் சேர்ந்த தங்கவேல்(40) என்பவருக்கு பழக்கம் ஏற்பட்ட தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தங்கவேல் செல்போனில் தொடர்பு கொண்டு அங்கன்வாடி பணியாளரைத் தொல்லை கொடுத்து வந்ததாகப் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து அவிநாசி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தங்கவேலை கைது செய்தனர்.
வணிக வளாகத்தில் திருட முயன்றவர் பிடிபட்டார்
அவிநாசி, டிச. 22- அவிநாசியில் தனியார் வணிக நிறுவனத்தில் திருட முயன்ற மர்ம நபரை பொதுமக்கள் பிடித்து காவல் நியைத்தில் ஒப்படைத்தனர். அவிநாசி, கைகாட்டிப்புதூர் அருகே தனியார் வணிக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந் நிறுவனத்தின் மேற்கூரையை இரு மர்ம நபர்கள் வெள்ளியன்று இரவு பிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒருவர் இதனைப் பார்த்து கூச்சலிட்டார். இதையடுத்து மர்ம நபர்கள் இருவரும் தப்பி ஓட முயற்சித்தனர். பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் தப்பிய நிலையில் மற்றொரு நபர் பிடிபட்டார். அவரை பொதுமக்கள் அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து அவிநாசி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
அரூர் அருகே சாலை விபத்தில் ஓட்டுநர் பலி
தருமபுரி, டிச. 22- அரூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் டெம்போ ஓட்டுநர் பலியானார். தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள எலவடை பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்மணி (50). டெம்போ ஓட்டுநரான இவர் மருதம்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்பு (42) என்பவருடன் சொந்த வேலையின் கார ணமாக சனியன்று டெம்போவில் திப்பம்பட்டி சென்று கொண்டிருந்தார். திப்பம்பட்டி கூட்ரோடு வளைவு அருகே சென்றபோது வலதுபுறமாக டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தமிழ்மணி டிராக்டரை முந்திச்செல்ல முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்து கொண் டிருந்த லாரி, டெம்போ மீது மோதியது. இந்த விபத் தில் பலத்த காயமடைந்த தமிழ்மணி சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். இவருக்கு ஞானமணி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மேலும் டெம்போவில் வந்த மற்றொருவரான அன்புவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அந்த வழியாக வந்தவர்கள் அன்புவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.