tamilnadu

அவிநாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்க புதிய கட்டிடம் திறப்பு

அவிநாசி, மார்ச் 7- அவிநாசி அரசு மருத்துவமனையில் பார்வை யாளர் தங்க படுக்கை வசதியுடன் கூடிய கட்ட டத்தை சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் சனியன்று திறந்து வைத்தார். அவிநாசி அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளின், பார்வையாளர்கள் ஆண், பெண் இரு பாலரும் தங்கும் வகையில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் விடுதி அமைக்கப்பட்டது. ரூ.31லட்சம் மதிப்பில் 26 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இக்கட்டடத்தை சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் சனியன்று திறந்து வைத்தார். மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் சேகரம் செய்ய நான்கு சக்கர வாக னங்களை பேரூராட்சிக்கு வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில், பேரூராட்சிகள் உதவி செயற் பொறியாளர் அலாவுதின், பேரூராட்சி செயல் அலு வலர் தி.ஈஸ்வரமூர்த்தி, உதவி பொறியாளர் பழனி சாமி, ஒன்றியக் குழு தலைவர் ஜெகதீஸன், கூட்டு றவு சங்கத் தலைவர்கள் சேவூர் ஜி.வேலுசாமி, மு.சுப் பிரமணியம், முன்னாள் துணைத் தலைவர் எம்.எஸ்.மூர்த்தி, இணை இயக்குநர் (மருத்துவ பணி கள்) சாந்தி , மருத்துவ அலுவலர் ரமணன், மருத்து வர் பாலாஜி மற்றும் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;