tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருப்பூரில் நாளை மனித சங்கிலி இயக்கம்

திருப்பூர், ஜன. 28 - மத்திய அரசு மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் உள்நோக்கம் கொண்ட குடியுரி மைத் திருத்தச் சட்டத்துக்கு எதி ராக தேசத்தந்தை மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தின மான ஜனவரி 30ஆம் தேதி, திருப்பூ ரில் மாபெரும் மனித சங்கிலி இயக் கம் நடத்துவது என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை முடிவு செய்துள் ளது. திருப்பூர்- பல்லடம் சாலையி லுள்ள காதர் சலீமா திருமண மண் டபத்தில் திங்களன்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடைஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருப்பூர் சமூக நல்லிணக்க இயக்கத்தின் தலை வர் வழக்கறிஞர் பி.மோகன் தலைமை வகித்தார். அனைத்து அரசியல் கட்சிகள், இமாம்கள், ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் பங்கேற்றனர். திமுக வடக்கு மாவட்டச் செய லாளர் க.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ப.கோபி மற்றும் மதிமுக, விசிக, கொமதேக, திக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்பின் நிர்வாகிகள், இஸ்லா மிய மத இமாம்கள், ஜமாத் நிர்வாகி கள் உரையாற்றினர்.  இதில் மத்திய அரசு நிறைவேற் றியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜனவரி 30 ஆம் தேதி திருப்பூரில் பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பிருந்து, அவிநாசி சாலை வரை மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என்று தீர் மானிக்கப்பட்டது. அத்துடன் குடி யுரிமை சட்ட எதிர்ப்புப் போராட் டத்தில் பங்கேற்றோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை காவல் துறை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரியும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் பல்வேறு அரசி யல், சமூக அமைப்புகளை உள்ள டக்கி, வியாழக்கிழமை திருப்பூரில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறது. இந்த இயக்கத்தை முழு வெற்றி பெறச் செய்வது ஜனநாயக எண் ணம் கொண்ட அனைத்துத் தரப்பு மக்களின் கடமை ஆகும். எனவே மனிதசங்கிலி இயக்கத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்வ துடன், சமூகத்தின் பல்வேறு பிரி வினரையும் இந்த இயக்கத்தில் கலந்து கொள்ளச் செய்து வலு வான மனித சங்கிலியை அமைத்து வெற்றியை உறுதிப்படுத்த வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ன் செவ்வா யன்று விடுத்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவிநாசி
அவிநாசி ஒன்றியம் திருமுரு கன்பூண்டி அருகே உள்ள திமுக அலுவலகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின ரின் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் பழனிசாமி, பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடாசலம், இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி இசாக், கோபால், மதிமுக சுப்பிரமணி, காங்கிரஸ் மணி, விசிக சிவக்குமார், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி அருண், மனிதநேய மக்கள் கட்சி ரஹ்மதுல் லாஹ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 31 கிராமப் பஞ்சாயத்துகள் இரண்டு பேரூராட்சி பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.என் ஆர்சி, என்பிஆர் பணிகளை கைவிட வேண்டும் என வலியுறுத் தப்பட்டது. மேலும் இதனை வலி யுறுத்தி பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 தேதி வரை மக்களைச் சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

;