திருப்பூர், ஜன. 25 – திருப்பூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன் னிட்டு நூறு வயது கடந்த மற்றும் மூத்த குடிமக்க ளான வாக்காளர்களை மாவட்ட ஆட்சியர் கே.விஜய கார்த்திகேயன் சால்வை போர்த்தி கௌரவித்தார். மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சனியன்று நடைபெற்ற இவ்விழாவில் 102 வயதான ந.குப்பாத் தாள், 86 வயதுடைய ப.குப்பாள், 84 வயதான சி.வெங் கிடபதி ஆகியோருக்கு நினைவுக் கேடயத்தையும் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வழங்கினார். மேலும் தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற் றிய கணினி இயக்குபவர்களுக்கு பாராட்டுச் சான்றி தழ் வழங்கப்பட்டது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன. முன்னதாக இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார், மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குநர் ஜெ.ரூபன் சங்கர்ராஜ், மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாகுல்ஹமீது, தேர்தல் தனி வட்டாட்சியர் ச.முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.