tamilnadu

img

வாணியம்பாடியில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

ஆம்பூர், ஜன. 16 - திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் பாழடைந்துள்ள பெண்கள் பூங்கா புதுப்பிக்கவும், நீண்ட நாள் கோரிக்கையான நியூடவுன் ரயில்வே  மேம்பால சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட ஆட்சியர் சிவனருள் அமைச்சரு டன் ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து நியூடவுன் பிள்ளையார் கோயில் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான  இடத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும், நகராட்சிக்கு வருவாய் பெரும்  வகையில் திட்டத்தை கொண்டுவர வேண்டும்  என ஆலோசனை மேற்கொண்டார்.  அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர்  நகராட்சிக்கு சொந்தமான காலியாக உள்ள  இடம் கடந்த பல ஆண்களாக கோயில் நிர்வாகத் தின் கீழ் பராமரிப்பு செய்து வருகி றது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து பைபாஸ் சாலை யில் ரூ.4. கோடி 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்  பட்டு பயன்பாடின்றி உள்ள கூடுதல் பேருந்து நிலைய கட்டிடத்தை பார்வை யிட்டார். அந்த கட்டிடத்தில் மாடு அறுக்கும்  தொட்டி மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை  நிலையம் அல்லது காய்கறி மற்றும் மீன்  மார்கெட்  கொண்டு வர ஆய்வு மேற்கொள்  ளப்பட்டது.  தொடர்ந்து நகராட்சி தங்கும் விடுதி, பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகம், வாரச் சந்தை மைதானம், அம்மா  உணவகம், தாய்சேய் விடுதி, சின்னாறு பகுதி  மற்றும் ஆலங்காயம் ஒன்றியப் பகுதியில் புதியதாக கட்டி வரும் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடம் உட்பட பல வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது நகராட்சி பொறி யாளர் தாமஸ், ஆலங்காயம் வட்டார வளர்ச்சி  அலுவலர் வசந்தி மற்றும் அரசு அதிகாரி கள் அலுவலர்கள் உடனிருந்தனர்.

;