tamilnadu

செப்.27-இல் நீதிமன்ற புறக்கணிப்பு மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் வழக்கறிஞர்கள் முற்றுகை

திருநெல்வேலி. செப்.15- புதிய மோட்டார் வாகனச் சட் டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் 27-ஆம் தேதி சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழு அறிவித்துள்ளது.  இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் நந்தகுமார் செய்தியாளர்களி டம் கூறியதாவது: தமிழ்நாட்டில் நீதிமன்ற பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தமிழ் தெரிந்திருக்கவேண்டியதில்லை; அவர்கள் பணியில் சேர்ந்த பின்னர் தமிழ் கற்றுக்கொள்ள கால அவகாசம் கொடுக்கப்படும் என்ற கொள்கையை கண்டிக்கிறோம். இளம் வழக்கறி ஞர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம்தோறும் ரூ.5 ஆயிரத்தை மூன்று ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும். சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூ லிப்பதில் வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும். வழக்கறி ஞர்களின் சேமநல நிதியை ரூ.15 லட்ச மாக உயர்த்த வேண்டும்.  மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 27-ஆம் தேதி நீதிமன்றப் புறக்க ணிப்பும் சென்னையில் பேரணியும், உயர் நீதிமன்றம் அருகே முற்று கைப் போராட்டமும் நடைபெறும். மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை லோக் அதாலத், சமரச மையம் உள்ளிட்டவற்றில் வழக்கறி ஞர்கள் ஆஜராக மாட்டார்கள்.  நீதிபதியாக தேர்வு செய்யப்படு வோருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு களாவது வழக்குரைஞர் அனு பவம் தேவை. தற்போது படித்து முடித்துவிட்டு வந்தவுடன் நீதிபதி களாக தேர்வு செய்கின்றனர்.  இதனால் வழக்குகளை கையா ளத் தெரியாமல் திண்டாடும் நிலை ஏற்படுகிறது.  இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது வழக்கறிஞர்கள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

;