திருநெல்வேலி, மே 23- அகில இந்திய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நெல்லை மாவட்டம் வி.கே புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இசக்கிராஜன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுரேஷ், முத்துகிருஷ்ணன், ஆர்.முருகன், காதர்பாட்சா, மகாலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அம்பாசமுத்திரம் ஒன்றிய நிர்வாகிகள் சுரேஷ்பாபு, சுடலையாண்டி ஆகியோர் பேசினர். சிபிஎம் அம்பாசமுத்திரம் ஒன்றியச் செயலாளர் ரவீந்திரன் நிறைவுரையாற்றினார்.