tamilnadu

img

கடையம் வனச்சரகத்தில் சிக்கிய 7 கரடிகள்

திருநெல்வேலி, ஜூன் 23- தென்காசி மாவட்டம்  களக்காடு முண்டந் துறை புலிகள் காப்ப கத்தில் கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட முதலியார்பட்டி அருகே மருத்துவர் மகபூப் என்பவர் தோட்டத்தில் வனத்துறையினர் வைத்த கூண்டில் செவ்வாய்க்கிழமை கரடி ஒன்று சிக்கியது.  ஒரு வாரத்திற்குள் இந்த தோட்டத்தில் பிடிபடும் இரண்டா வது கரடி இது. கடையம் வனச்சரகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் பிடிபடும் ஏழாவது கரடி ஆகும். இதே முத லியார்பட்டி மருத்துவர் மகபூப் தோட்டத்தில் கடந்த வாரம்தான்  ஒரு கரடி சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலை யில் அவரின் தோட்டத்தில் இரண்டாவது முறையாக கரடி  சிக்கியுள்ளது.