tamilnadu

மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, அக்.30-  மாவட்ட அளவிலான திறன் போட்டிக ளுக்கு விண்ணப்பித்தல் குறித்து புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளதாவது: சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021 செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேசத் திறன் போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் நடைபெற வுள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டி களில் பங்கேற்க https:worldskillsindia.co.in/worldskill/world/ என்ற இணைய தளத்தில் தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப் பிக்கலாம்.  மேலும், 6 துறைகளில் உள்ள 47 தொழிற் பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 25.11.2019. வயது வரம்பு 1.1.1999 அன்றும், அதற்குப் பிறகும் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழிற் பிரிவுகளுக்கு 1.1.1996 அன்றும், அதற்குப் பிறகும் பிறந்தவர்கள் தகுதியுடையவர்களாவர். ஐந்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரைக் கல்வித் தகுதி பெற்ற வர்கள் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மற்றும் படித்து கொண்டி ருப்பவர்கள், தொழிற் பயிற்சி நிலையம், தொழிற் நுட்ப கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்கள், தொழிற் சாலையில் பணியில் உள்ளவர்கள், குறுகிய கால தொழிற் பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் விபரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலர், மாவட்ட திறன் பயிற்சி அலு வலகம், புதுக்கோட்டை, 9443184841 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள லாம்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.