tamilnadu

img

உலக மீனவர் தின விழா

தஞ்சாவூர்: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் தேதி உலக மீனவர் தினம் அனுசரிக்கப்படு கிறது. இதில் தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை அன்று உலக மீனவர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச் செயலாளர் ஏ.தாஜுதீன், கடலோரக் காவல்படை உதவி ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியை உஷா வரவேற்றார்.  தொடர்ந்து நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் அப்துல் சமது, நாட்டுப்படகு சங்க தலைவர் செய்யது முகம்மது, செயலாளர் அப்துல் ரகுமான், விசைப்படகு சங்க செயலாளர் இப்ராஹிம், மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் நூருல் அமீன், காதர் மைதீன் மற்றும் ஜமாத்தார்கள் பங்கேற்றனர். நிறைவாக மீன்வளத்துறை ஆய்வாளர் கங்கேஸ்வரி நன்றி கூறினார்.